சந்தேகமே வேண்டாம்.. அவர் தான் இந்திய அணியின் வருங்கால 3 ஃபார்மட் பிளேயர்.. ஆஷிஸ் நெஹ்ரா பாராட்டு

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை சந்தித்த இந்தியா மீண்டும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதலிரண்டு போட்டிகளில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இந்தியாவுக்கு 3வது போட்டியில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியா அவ்வளவு எளிதில் இத்தொடரின் கோப்பையையும் உங்களால் வெல்ல முடியாது என்பதை காண்பித்தது.

முன்னதாக கௌகாத்தி நடைபெற்ற இத்தொடரின் 3வது போட்டியில் இதர வீரர்கள் சற்று தடுமாறிய நிலையில் துவக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கைக்வாட் மிகச் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார். குறிப்பாக முதல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து நிதானமாக விளையாடிய அவர் அதன் பின் அந்நியனாக மாறி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 123* ரன்கள் குவித்தது அனைவரையும் வியக்க வைத்து பாராட்ட வைத்தது.

- Advertisement -

ஆல் ஃபார்மட் ஃபிளேயர்:
இந்நிலையில் ஆரம்பத்தில் நிதானமாகவும் கடைசியில் சூழலுக்கு தகுந்தார் போல் அதிரடியாகவும் விளையாடிய ருதுராஜ் வருங்காலங்களில் 3 வகையான இந்திய அணியிலும் விளையாடக்கூடிய திறமையைப் பெற்றிருப்பதாக ஆசிஷ் நெஹ்ரா பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்தில் பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“ருதுராஜ் எந்த மாதிரியான வீரர் என்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக அவருடன் ஒப்பிடும் போது ஜெயஸ்வால் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமானது. அதாவது டி20 கிரிக்கெட்டில் கூட சில நேரங்களில் நீங்கள் திடமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியமாகும். அதை ருதுராஜ் செய்து காட்டினார். கண்டிப்பாக அவர் இந்தியாவுக்காக வரும் காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய வீரர் என்பதில் சந்தேகமில்லை”

- Advertisement -

“மேலும் ருதுராஜ் காட்டும் எலிகன்ஸ் நம்ப முடியாததாக இருக்கிறது. அப்போட்டியில் அவர் மிகவும் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார்” என்று கூறினார். அவர் கூறுவது போல ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் சதமடித்துள்ள ருதுராஜ் கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்தார்.

இதையும் படிங்க: இந்தியா – ஆஸி மோதும் 4வது டி20 நடைபெறும் ராய்ப்பூர் மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

அதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்த அவர் டி20 கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரில் 2021 ஆரஞ்சு தொப்பி வென்று சென்னை கோப்பையை வெல்ல உதவினார். அந்த வகையில் வரும் காலங்களில் அவர் கண்டிப்பாக 3 வகை என கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் முதன்மை பேட்ஸ்மேனாக இருப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement