இந்தியா – ஆஸி மோதும் 4வது டி20 நடைபெறும் ராய்ப்பூர் மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. ஆனால் 3வது போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 2023 உலகக் கோப்பையை வென்ற எங்களுக்கு இதெல்லாம் சாதாரணம் என்பது போல் க்ளன் மேக்ஸ்வெல் அதிரடியால் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

இந்த நிலைமையில் 4வது போட்டியில் வென்று இத்தொடரை கைப்பற்ற இந்தியா தயாராகி வருகிறது. அதற்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடும் நிலையில் பவுலர்கள் கொஞ்சம் பொறுப்புடன் ரன்களை வள்ளலாக வாரி வழங்காமல் செயல்படுவது அவசியமாகிறது. மறுபுறம் மீண்டும் அதிரடியாக விளையாடி இத்தொடரையும் இந்தியா வெல்லவிடாமல் செய்வதற்கு ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது.

- Advertisement -

ராய்ப்பூர் மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி டிசம்பர் ஒன்றாம் தேதி இரவு 7 மணிக்கு சட்டீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் ராய்ப்பூர் நகரில் உள்ள சாகித் வீர் நாராயணன் சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2008இல் தோற்றுவிக்கப்பட்டு 60000 ரசிகர்கள் அமரக்கூடிய வகையில் நவீன வசதிகளை கொண்ட மைதானத்தில் முதல் முறையாக இப்போது தான் ஒரு சர்வதேச டி20 போட்டி நடைபெறுகிறது.

மேலும் வரலாற்றில் இங்கு நடைபெற்ற ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்திருந்தது. மற்ற படி பெரும்பாலும் இங்கு ஐபிஎல் மற்றும் ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் விளையாடிய ரோட் சேஃப்டி சீரிஸ் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதனால் இந்த மைதானத்தில் மேற்கொண்டு பார்ப்பதற்கு வரலாற்று புள்ளி விவரங்கள் எதுவுமில்லை.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
டிசம்பர் 1ஆம் தேதி ராய்ப்பூர் நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 10% மட்டுமே இருப்பதாகவும் வானம் லேசான மேகமூட்டத்துடன் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
ராய்ப்பூர் மைதானம் இதற்கு முன்பு நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டிகளில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருந்துள்ளது. இந்த மைதானத்தில் பவுண்டர்களின் அளவுகள் சற்று பெரிதாக இருக்கும் என்பதால் ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கலாம். எனவே இந்த மைதானத்தில் 170 – 200 ரன்களை அடிப்பது வெற்றி பெறுவதற்கான நல்ல ஸ்கோராக இருக்கலாம்.

இதையும் படிங்க: தேவையில்லாமா எதுக்கு இந்த சீரிஸ்.. முழு பவர நாங்க காட்ட விரும்பல.. மைக் ஹசி விமர்சனம்

இதற்கு முன் இங்கு இதுவரை நடைபெற்ற 29 உள்ளூர் டி20 போட்டிகளில் 16 முறை சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 13 முறை மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. மேலும் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் டாஸ் வெல்லும் கேப்டன் இப்போட்டியில் முதலில் பந்து வீசி பின்னர் சேசிங் செய்ய முயற்சிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement