எம்.ஜி.ஆர் ஸ்டைலில் அடிவாங்கும் ருதுராஜ் கெய்க்வாட், கலாய்க்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

Ruturaj
Ruturaj Gaikwad
- Advertisement -

மும்பை நகரில் கோலாகலமாக துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 3-ஆம் தேதியன்று நடந்த 11-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் 4 ரன்களில் அவுட்டானார்.

Livingstone

- Advertisement -

அடுத்து வந்த இலங்கையின் அதிரடி வீரர் ராஜபக்சாவை 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எம்எஸ் தோனி அற்புதமாக ரன் அவுட் செய்தார். இதனால் 14/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த இயான் லிவிங்ஸ்டன் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானுடன் இணைந்து அதிரடியாக விளையாடி சரிவில் இருந்து மீட்டெடுத்தார்.

லிவிங்ஸ்டன் அதிரடி:
3-வது விக்கெட்டுக்கு சென்னை பவுலர்களை புரட்டி எடுத்த இந்த ஜோடியில் ஷிகர் தவான் 24 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் சென்னை பவுலர்களை தெறிக்கவிட்ட லிவிங்ஸ்டன் வெறும் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட அரைசதம் அடித்து 60 ரன்கள் விளாசி அவுட்டானர். அதைப் பயன்படுத்திய சென்னை வீரர்கள் கடைசி நேரத்தில் ஒரு சில முக்கிய விக்கெட்டுகளை எடுத்ததால் 200 ரன்களை தொடவேண்டிய பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180/8 ரன்கள் எடுத்தது. சென்னை சார்பில் பந்துவீச்சில் அசத்திய பிரிடோரியஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

CSK vs PBKS

அதன்பின் 181 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு ஆரம்பமே மாபெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ஏனெனில் அந்த அணியின் இளம் தொடக்க வீரர் ருடுராஜ் 1 ரன்னில் அவுட்டாக அவருடன் களமிறங்கிய அனுபவ தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 13 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் மோசமான தொடக்கத்தை பெற்ற சென்னைக்கு அடுத்து களமிறங்கிய மொயின் அலி மற்றும் கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தனர். அந்த நிலையில் அம்பத்தி ராயுடுவும் 13 (21) ரன்களில் நடையை கட்டியதால் 36/5 என திண்டாடிய சென்னை ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் வலுவாக சிக்கியது.

- Advertisement -

சென்னை ஹாட்ரிக் தோல்வி:
அந்த நேரத்தில் களமிறங்கிய இளம் வீரர் சிவம் துபே அதிரடியாக பேட்டிங் செய்து 30 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 57 ரன்கள் குவித்து சென்னை மானத்தை ஓரளவு காப்பாற்றினார். அவருடன் களமிறங்கிய முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 28 பந்துகளில் 23 ரன்களுடன் போராட ஒருபுறம் விக்கெட் விழாமல் நிலைத்து நிற்க மறுபுறம் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வரிசையாக பெவிலியன் திரும்பியதால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை 126 ரன்களுக்கு சுருண்டது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் கலக்கிய ராகுல் சஹர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

CSK vs PBKS 3

இதன் வாயிலாக 54 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற பஞ்சாப் இந்த தொடரில் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் சென்றது. மறுபுறம் நடப்புச் சாம்பியனான சென்னை இந்த வருடம் இதுவரை பங்கேற்று 3 போட்டிகளில் 3 அடுத்தடுத்த தோல்விகளை பெற்றதால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து அவமானத்திற்கு உள்ளாகியது.

- Advertisement -

எம்ஜிஆர் ஸ்டைலில் ருதுராஜ்:
முன்னதாக இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இது மட்டுமல்லாமல் இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை களமிறங்கிய கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட்டான அவர் லக்னோவுக்கு எதிரான 2-வது போட்டியிலும் 1 ரன்னில் அவுட்டானார். மொத்தத்தில் இதுவரை அவர் பங்கேற்ற முதல் 3 போட்டிகளில் முறையே 0, 1, 1 என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது சென்னையின் அடுத்தடுத்த தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

CSK vs PBKS 2

கடந்த வருடம் 635 ரன்களை தெறிக்க விட்டு ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர் சென்னை 4-வது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அப்படிப்பட்ட அவர் இந்த வருடம் இப்படி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது. ஆனால் அவர் இது போல தடுமாறுவது இது புதிதல்ல.

- Advertisement -

1. ஏனெனில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் காலடி பதித்த அவர் தனது முதல் 3 போட்டிகளில் முறையே 0 (1), 5 (10), 0 (5) என 2 டக் அவுட் உட்பட வெறும் 5 ரன்களை மட்டுமே எடுத்தார். ஆனால் அடுத்த 3 போட்டிகளில் சரவெடியாக வெடித்த அவர் 3 அரை சதங்கள் உட்பட 199 ரன்கள் எடுத்து மொத்தம் 204 ரன்கள் விளாசினார்.

ruturaj

2. அதேபோல் 2021-ஆம் ஆண்டு முதல் 3 போட்டிகளில் 5 (8), 5 (16), 10 (13) என 15 ரன்களை மட்டும் எடுத்து மீண்டும் மோசமான தொடக்கத்தை பெற்றார். ஆனால் அதன்பின் பட்டைய கிளப்பிய அவர் பைனல் உட்பட அடுத்த 13 போட்டிகளில் 4 அரை சதங்கள் 1 சதம் உட்பட 620 ரன்களை விளாசி மொத்தம் 635 ரன்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

3. தற்போது மீண்டும் அதே போலவே முதல் 3 போட்டிகளில் சொதப்பியுள்ள அவர் விரைவில் அதிரடியாக விளையாடுவார் என உறுதியாகக் கூறலாம். இதைப் பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் தமிழக மக்களின் இதயங்களில் இன்றும் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஸ்டைலில் ருதுராஜ் விளையாடுகிறார் என்று கலகலப்புடன் கலாய்க்கிறார்கள்.

இதையும் படிங்க : இருவருமே மன்னிப்பு கேட்டோம் ! சண்டைக்கோழியாக இருந்து நண்பர்களானதை பற்றி ஹர்பஜன் வெளிப்படை

ஏனெனில் தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டாரான அவர் தனது பெரும்பாலான படங்களில் வில்லன்களுடன் சண்டை போடும்போது முதலில் 3 அடி வாங்குவார். அதன் பின் அவர்களைப் அதிரடியாக அடித்து வெற்றி காண்பார். அப்படி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு டிரேட்மார்க் முத்திரை பெற்றுள்ள எம்ஜிஆரை போலவே ருதுராஜ் விளையாடுகிறார் என நிறைய சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

Advertisement