இருவருமே மன்னிப்பு கேட்டோம் ! சண்டைக்கோழியாக இருந்து நண்பர்களானதை பற்றி ஹர்பஜன் வெளிப்படை

Harbhajan
- Advertisement -

கிரிக்கெட்டில் தங்கள் நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் வெற்றி பெறுவதற்காக தங்களது முழு திறமையையும் பயன்படுத்தி முழுமூச்சுடன் போராடுவார்கள். அப்படிப்பட்ட நிலையில் தங்கள் அணிக்கு வெற்றி தேடித் தருவதற்காக எதிரணி வீரர்களுடன் ஆக்ரோஷமாக மோதும் அவர்கள் சில சமயங்களில் சண்டையில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆகியோர் தங்கள் நாட்டுக்காக விளையாடும்போது சண்டையில் ஈடுபட்டது காலத்திற்கும் அழிக்க முடியாததாகும்.

harbhajan 1

- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் பங்கேற்றது. அப்போது சிட்னி நகரில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்சை குரங்கு என இந்திய வீரர் ஹர்பஜன் சிங் திட்டியதாக புகார் எழுந்தது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

சண்டைக்கோழிகள்:
அதை ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் நடுவர்களிடம் புகார் செய்ததை அடுத்து ஹர்பஜன் சிங்க்கு ஒரு போட்டியில் விளையாட அதிரடியான தடை விதிக்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு ஆதரவாக நின்ற பிசிசிஐ தடை விதித்தால் ஆஸ்திரேலியா தொடரை ரத்து செய்துவிட்டு பாதியிலேயே நாடு திரும்புகிறோம் என கிடுக்குப்பிடி போட்டதால் வேறு வழியின்றி ஹர்பஜன் சிங் மீதான தடை நீக்கப்பட்டது.

harbhajan 3

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் அது ஒரு மிகவும் மோசமான சர்ச்சையாக இன்று வரை பார்க்கப்படுகிறது. ஆனால் அதன்பின் நடந்த ஐபிஎல் தொடரில் அந்த இருவரும் ஒன்றாக ஒரே மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விளையாடியது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

- Advertisement -

எப்படி சாத்தியம்:
ஏனெனில் அந்த அளவுக்கு சண்டைபோட்டுக் கொண்ட அவர்கள் திடீரென்று ஒரே அணியில் விளையாட வேண்டுமெனில் அதற்கு இருவருமே அந்த பழைய மோசமான தருணங்களை மறக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சைமன்ஸ் உடன் இணைந்து ஒன்றாக விளையாடியது எப்படி சாத்தியமானது என்பது பற்றி ஹர்பஜன் சிங் மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் சண்டிகரில் இருந்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அந்த தொடரில் நாங்கள் வென்ற ஒரு போட்டியில் விளையாடிய பின்பு நாங்கள் இருவரும் எனது நண்பரின் இடத்திற்கு சென்றோம்.

அங்கு நாங்கள் முதல் முறையாக கட்டிப்பிடித்து ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டோம். அந்த மோசமான பிரச்சினையை இன்னும் சுமுகமான முறையில் தீர்த்திருக்கலாம் என்று நாங்கள் உணர்ந்தோம். இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு பரிதாபப்பட்டோம். அதை மும்பை இந்தியன்ஸைச் சேர்ந்த எங்களது நண்பர்கள் பலரும் அந்த தருணத்தின் படங்களைக் கிளிக் செய்தனர்” என கூறினார்.

- Advertisement -

பொதுவாக எந்த பிரச்சனையாக இருந்தாலும் மனம் விட்டு பேசினால் சுமூகமாக தீர்ந்து விடும் எனக் கூறுவார்கள். அதையே கையிலெடுத்த ஹர்பஜன் சிங் மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆகியோர் மனம் விட்டுப் பேசி ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு கட்டிப்பிடித்து ஒன்று சேர்ந்த பின்னணியை தற்போது ஹர்பஜன் பகிர்ந்துள்ளார்.

Harbhajan 3

பேசி தீர்த்த ஹர்பஜன் – சைமன்ஸ்:
“முதல் முறையாக மும்பை அணி எங்களை ஒன்றாக தேர்வு செய்தபோது எதற்காக இப்படி செய்தார்கள் என நினைத்தேன். சைமன்ஸ் உடன் இணைந்து எப்படி விளையாட போகிறோம் என நினைத்தேன். அந்த நிலையில் மும்பை அணியுடன் அவர் முதல்முறையாக இணைந்தபோது மாறுபட்டவராக இருப்பார் என எதிர்பார்த்தேன். அதிலும் என்மீது அவர் கோபத்துடன் இருப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அதன்பின் நாங்கள் இருவரும் ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிடத் துவங்கினோம்.

- Advertisement -

அந்த சமயத்தில் எங்களுக்கு இடையே சண்டை என ஊடகங்கள் எழுதின. இருப்பினும் மும்பை அணியில் நாங்கள் விளையாடிய போது எங்கள் இருவருக்கும் அதற்கு முன்பு அது போன்ற சண்டை ஏற்படவே இல்லை என்பது போல் உணர்ந்தோம்” என இதுபற்றி ஹர்பஜன்சிங் மேலும் தெரிவித்தார்.முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரும்போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தம் மீது கோபத்துடன் இருப்பார் என எதிர்பார்த்தாக கூறியுள்ள ஹர்பஜன் சிங் அதற்கு நேர்மாறாக பழையதை மறந்து விட்டு அவர் தன்னுடன் அன்புடன் பழகியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சென்னை அணியை இப்படி சுருட்டி வீசி நாங்கள் பெற்ற பிரமாண்ட வெற்றிக்கு இதுவே காரணம் – மாயங்க் அகர்வால் பேட்டி

மேலும் மும்பை அணியில் விளையாட துவங்கிய போது அதற்கு முன் சண்டை எதுவும் இருவருமே போட்டுக் கொண்டதாக உணரவில்லை என்பதுபோல உணர்ந்ததால் எளிதாக பழகி ஒன்றாக ஒரே அணியில் வெற்றிகரமாக விளையாட முடிந்ததாக ஹர்பஜன் சிங் கூறினார்.

Advertisement