சென்னை அணியை இப்படி சுருட்டி வீசி நாங்கள் பெற்ற பிரமாண்ட வெற்றிக்கு இதுவே காரணம் – மாயங்க் அகர்வால் பேட்டி

Agarwal
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 11 ஆவது லீக் போட்டி நேற்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. ஏற்கனவே இரண்டு தோல்வியை சிஎஸ்கே அணி சந்தித்திருந்தால் நேற்றைய போட்டி அவர்களுக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்தது. அதே வேளையில் பஞ்சாப் அணி கடந்த ஆண்டை விட இந்த முறை சிறப்பாக உள்ளதால் அவர்களும் சென்னை அணியை வீழ்த்தி தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்த காத்திருந்தனர்.

CSKvsPBKS

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட பஞ்சாப் பணியானது சென்னை அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது பேட்டிங்கில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 180 ரன்களை குவித்தது.

அதனைத்தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு சென்னை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விளையாடிய சென்னை அணியை எந்த ஒரு இடத்திலும் தலைதூக்க விடாமல் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி வந்தனர்.

CSK vs PBKS 3

இன்னும் சொல்லப் போனால் இருபது ஓவர்கள் கூட முடியாமல் 18 ஓவரிலேயே சென்னை அணியை 126 ரன்களில் சுருட்டி பிரமாதமான வெற்றியை பஞ்சாப் அணி பெற்றது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அகர்வால் கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் இந்த போட்டியில் இறுதியில் சற்று குறைவாக ரன்களை குவித்தோம் என்றே நினைக்கிறேன். ஆனாலும் 180 ரன்கள் என்பது சேசிங் செய்ய எளிதாக இருக்காது என்பது மட்டும் எங்களுக்கு தெரியும். அதிலும் குறிப்பாக பந்து வீச்சின் போது புதிய பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம். இந்த போட்டியில் நாங்கள் நினைத்தது அனைத்தும் சிறப்பாக நடந்து நாங்கள் வெற்றி பெற்றோம்.

இதையும் படிங்க : அசத்திய பஞ்சாப்! 9 வருடங்களுக்கு பின் மோசமான தோல்வியை சந்தித்த சென்னையின் பரிதாபம் – விவரம் இதோ

இந்த போட்டியில் லிவிங்ஸ்டன் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. அதேபோன்று வைபவ் பந்துவீச்சு அருமையாக இருந்தது. விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாங்கள் நினைத்த திட்டங்கள் அனைத்தையும் களத்தில் சிறப்பாக செயல்பட்டதால் எளிதில் சென்னை அணியை வீழ்த்தினோம் என அகர்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement