பென் ஸ்டோக்ஸை அப்படி நினச்சு தான் வாங்குனாங்க.. தோனிக்கு அப்றம் அவர் தான் சிஎஸ்கே கேப்டன்.. அஸ்வின் கணிப்பு

- Advertisement -

ஐபிஎல் 2023 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிலிருந்து மும்பை வாங்கியது உட்பட அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையற்ற வீரர்களை கழற்றி விட்டு தேவையான வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கி முடித்துள்ளன. அந்த வரிசையில் நடப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸை விடுவித்துள்ளது.

2019 உலகக்கோப்பை உட்பட இங்கிலாந்தின் முக்கியமான வெற்றிகளில் பங்காற்றி உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக கருதப்படும் அவர் 16.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட போதிலும் காயம் காரணமாக 2023 சீசனில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இருப்பினும் இதர வீரர்களை வைத்து சொல்லி அடித்த தோனி தலைமையிலான சென்னை 5வது முறையாக கோப்பையை வென்று மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது.

- Advertisement -

அஸ்வின் கணிப்பு:
முன்னதாக 2008 முதல் இப்போது வரை சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் ஜாம்பவான் எம்எஸ் தோனி சமீபத்தில் 41 வயதை கடந்து விட்டதால் 2024 சீசனில் விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த சீசனில் முழங்கால் வலியுடன் விளையாடிய அவர் பெரும்பாலும் பேட்டிங் செய்யாமல் கடைசி நேரத்தில் மட்டுமே களமிறங்கி வந்தார். ஆனாலும் தற்போது அவரை சென்னை நிர்வாகம் தக்க வைத்துள்ளதால் நிச்சயம் 2024 சீசனில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

இருப்பினும் எப்படியும் விரைவில் அவர் ஓய்வு பெற்றாக வேண்டும் என்பதால் சென்னையை அடுத்த கேப்டனாக வழிநடத்தப் போவது யார் என்பது அந்த அணி ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது. இந்நிலையில் உள்ளூர் அளவில் மகாராஷ்டிராவின் கேப்டனாக செயல்பட்ட அனுபவமிகுந்த ருதுராஜ் கைக்வாட் தோனிக்கு அடுத்ததாக சென்னை வழிநடத்த தகுதியான வீரர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சிஎஸ்கே தங்களுடைய அணியில் நிரப்ப வேண்டிய முக்கியமான பள்ளம் கேப்டன்ஷிப் ஆகும். அந்த சூழ்நிலையில் அம்பத்தி ராயுடு தன்னுடைய கடைசி பேட்டியில் சொன்னது போலவே ருதுராஜ் கைக்வாட் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று நான் நம்புகிறேன். சொல்லப்போனால் பென் ஸ்டோக்ஸை கேப்டனாக நியமிக்கலாம் என்ற எண்ணத்துடனேயே சென்னை வாங்கியது”

இதையும் படிங்க: இவரா பாண்டியாவுக்கு மாற்று பவுலர்.. மோசமான சாதனை படைத்த பிரசித் கிருஷ்ணா.. விளாசும் ரசிகர்கள்

“இருப்பினும் அது நடைபெறாமல் போனாலும் அனுபவத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் சென்னை அணியில் அவர் ஒரு அணியை வழிநடத்தும் அளவுக்கு தரமானவராக இருந்தார். மேலும் ஷார்துல் தாக்கூரையும் சென்னை தங்களுடைய அணியின் கலவையை மீண்டும் பெறுவதற்காக ஏலத்தில் வாங்க முயற்சிக்கலாம்” என்று கூறினார்.

Advertisement