இவரா பாண்டியாவுக்கு மாற்று பவுலர்.. மோசமான சாதனை படைத்த பிரசித் கிருஷ்ணா.. விளாசும் ரசிகர்கள்

Prasid Krishna
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி நம்பர் 28ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடியாக செயல்பட்டு 223 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக ருதுராஜ் சதமடித்து 123* (57), சூரியகுமார் யாதவ் 37 ரன்கள் எடுத்தனர். அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக விளையாடி 104* (48) ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியை கடைசி பந்தில் தூளாக்கினார்.

- Advertisement -

மோசமான சாதனை:
அதனால் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை எடுத்தும் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்ட இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. குறிப்பாக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா இப்போட்டியில் வென்று இத்தொடரை வெல்லும் வாய்ப்பையும் தக்க வைத்து எளிதாக சாய்ந்து விட மாட்டோம் என்பதை காட்டியது.

இந்த போட்டியில் பேட்டிங் துறையில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்தியா பெரிய ஸ்கோர் குவித்தது. ஆனாலும் பந்து வீச்சில் குறிப்பாக டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 ஓவரில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 68 ரன்களை வாரி வழங்கினார்.

- Advertisement -

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் அதிக ரன்கள் வாரி வழங்கிய இந்திய பவுலர் என்ற படுமோசமான வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற டி20 போட்டியில் யுஸ்வேந்திர சஹால் 64 ரன்கள் கொடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: போட்டியின் 20 ஆவது கடைசி ஓவரை மேக்ஸ்வெல்லிடம் வழங்க காரணம் இதுதான்.. வெற்றிக்கு பின் – மேத்யூ வேட் பேட்டி

இத்தனைக்கும் இளம் வீரராக சமீபத்தில் அறிமுகமாகி வாய்ப்பு பெற்று வரும் அவர் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக மாற்று வீரராக சேர்க்கப்பட்டார். இருப்பினும் ஷமி அபாரமாக பந்து வீசியதால் அவருக்கு கடைசி வரை உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போட்டியில் மோசமாக செயல்பட்டு படுமோசமான சாதனையின் படைத்துள்ளதை பார்க்கும் ரசிகர்கள் இவரா பாண்டியாவுக்கு பதிலாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்று சமூக வலைதளங்களில் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisement