போட்டியின் 20 ஆவது கடைசி ஓவரை மேக்ஸ்வெல்லிடம் வழங்க காரணம் இதுதான்.. வெற்றிக்கு பின் – மேத்யூ வேட் பேட்டி

Wade
- Advertisement -

மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது கவுகாத்தி நகரில் நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அதன்படி நடைபெற்று இந்த முடிந்த இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரினை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது.

பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது மேக்ஸ்வெல்லின் சிறப்பான ஆட்டம் காரணமாக கடைசி பந்தில் பவுண்டரியுடன் வெற்றி பெற்று சரியாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் கூறுகையில் : இதைவிட ஒரு சிறப்பான வெற்றி கிடைக்காது. எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே கடைசி ஓவரை வீச மேக்ஸ்வெல்லை அழைத்தேன். ஆனால் அந்த ஓவரில் 30 ரன்கள் சென்று விட்டன. இருப்பினும் அவரது இந்த நூறாவது டி20 போட்டியில் சதம் அடித்து எங்கள் அணியை அவர் வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : கடைசி வரை எங்களால அவரை தடுத்து நிறுத்த முடியல.. எங்க பிளான் பலிக்கல – தோல்விக்கு பின்னர் சூரியகுமார் பேட்டி

இந்த போட்டியில் 19 ஓவர்களில் 190 ரன்களை இந்திய அணி சேர்த்த போது கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் 30 ரன்கள் விட்டுத்தந்தார். அப்போது கேன் ரிச்சர்ட்ஸன் அந்த கடைசி ஓவரை வீசி இருக்கலாம் என்று ஓய்வறையில் வருத்தப்பட்டார். இருந்தாலும் மேக்ஸ்வெல் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என மேத்யூ வேட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement