IND vs WI : ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இப்படி ஒரு நிலைமையா? கண்ணீர் சிந்தும் சி.எஸ்.கே ரசிகர்கள் – அடப்பாவமே கஷ்டமா தான் இருக்கு

Ruturaj-Gaikwad
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது.

IND vs WI

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்கபிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது. அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்த வேளையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது.

முதல் விக்கெட்டிற்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது ஜோடி 229 ரன்கள் சேர்த்து அசத்தியது. ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்திருந்த வேளையில் ஆட்டமிழந்து வெளியேறிறினார். அதனைத்தொடர்ந்து இந்திய அணி இந்த போட்டியில் தற்போது வரை மிகச் சிறப்பான முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது.

Ruturaj

இவ்வேளையில் ருதுராஜ் கெய்க்வாட்டின் நிலையை நினைத்து சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இந்திய அணியில் துவக்க வீரராக ஜெயிஸ்வாலும், விக்கெட் கீப்பராக இஷான் கிஷனும் அறிமுகமாகிய வேளையில் ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கெய்க்வாட்டிற்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

அதே வேளையில் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஓவர்களின் இடைவெளியில் ருதுராஜ் கெய்க்வாட் அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்று கொடுத்து வந்தார். இப்படி ருதுராஜ் கெய்க்வாட்டை தண்ணீர் பாட்டிலுடன் கண்ட ரசிகர்கள் :

இதையும் படிங்க : IND vs WI : முதல் போட்டியிலேயே 90 வருட சாதனையை தகர்த்த ரோஹித் – ஜெய்ஸ்வால் ஜோடி – உண்டான புதிய சரித்திரம்

அவர் இப்படி தண்ணீர் பாட்டில் எடுத்து வருவதில் ஏதும் குறை இல்லை என்றாலும் மிக திறமையான வீரராக இருக்கும் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று சிஎஸ்கே ரசிகர்கள் தங்களது வருத்தங்களை சமூக வலைதளத்தின் மூலமாக பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement