IND vs WI : முதல் போட்டியிலேயே 90 வருட சாதனையை தகர்த்த ரோஹித் – ஜெய்ஸ்வால் ஜோடி – உண்டான புதிய சரித்திரம்

Jaiswal IND vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்கியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இருப்பினும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 150 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய அலிக் அதனேஷ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்து தன்னை உலகின் நம்பர் ஒன் பவுலர் என்பதையும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தேர்வு செய்யாமல் தவறு செய்து விட்டீர்கள் என்பதையும் நிரூபித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மாவுடன் முதல் முறையாக அறிமுகப் போட்டியில் விளையாடிய யசஸ்வி ஜெய்ஸ்வால் புதிய ஓப்பனிங் ஜோடியாக களமிறங்கினார். 2020 அண்டர்-19 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்து சென்ற அவர் ரஞ்சிக் கோப்பையில் 82 என்ற மிகச் சிறப்பான சராசரியில் ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

சரித்திர சாதனை:
அதை விட நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 டி20 தொடரில் ராஜஸ்தான் அணியில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற ஆல் சாதனை படைத்த அவர் 625 ரன்கள் குவித்து ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார். அதன் காரணமாக இந்த தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் முதல் பந்திலே பவுண்டரியை பறக்க விட்டு தம்முடைய கேரியரை அட்டகாசமாக துவக்கினார். அவருடன் கேப்டன் ரோகித் சர்மா மறுபுறம் தனது பங்கிற்கு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் முதல் நாள் முடிவில் இந்தியா 80/0 ரன்கள் எடுத்தது.

அந்த நிலைமையில் இன்று துவங்கிய 2வது நாளில் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த இந்த ஜோடி சுமாராக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை நிதானமாக எதிர்கொண்டு சீராக ரன்களை சேர்த்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான துவக்கத்தை கொடுத்தனர். நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி பெரிய சவாலாக மாறிய இந்த ஜோடியில் இருவருமே அரை சதமடித்து வெஸ்ட் இண்டீஸ் எடுத்த 150 ரன்கள் தாண்ட வைத்து இந்தியாவுக்கு முன்னிலையும் பெற்று கொடுத்தனர்.

- Advertisement -

இதன் வாயிலாக 90 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் இன்னிங்ஸில் எதிரணி எடுத்த ரன்களை விட அதிகமாக குவித்து முன்னிலை பெற்றுக் கொடுத்த முதல் இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற சரித்திர சாதனையை ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் சேர்க்கையிலேயே படைத்துள்ளனர். கடந்த 90 வருடங்களில் சேவாக் – கம்பீர் உட்பட வேறு எந்த இந்திய ஓப்பனிங் ஜோடியும் ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் எதிரணி எடுத்த ரன்களை விட கூடுதல் ரன்களை எடுத்து முன்னிலை பெற்றுக் இப்படி கொடுத்ததே இல்லை.

இதையும் படிங்க:IND vs WI : 2ஆவது இன்னிங்சிற்கு தேவையேயின்றி இந்திய அணி பெறப்போகும் வெற்றி – இதை கவனிசீங்களா?

அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அதை இந்த ஜோடி மிகவும் எளிதாக எடுத்து சாதனை படைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் சற்று முன் வரை 200 ரன்கள் குவித்துள்ள அந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக 200 ரன்கள் மற்றும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற வீரர் சேவாக் – வாஷிம் ஜாபர் ஆகியோரது சாதனையை தகர்த்து மற்றொரு வரலாற்றுச் சாதனையும் படைத்தனர். இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வீரேந்திர சேவாக் மற்றும் வாஷிம் ஜாபர் ஆகியோர் 159 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement