IPL 2023 : அதிரடி துவக்கம் – சதத்தை தவற விட்டாலும் தனி ஒருவனாக போராடிய ருதுராஜ் – பட்லர், சச்சினை முந்தி 2 அபார சாதனை

Rururaj Gaikwad
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னையை எதிர்கொண்ட நடப்பு சாம்பியன் குஜராத் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று இத்தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னை நிர்ணிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 178/7 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் 4 பவுண்டரி 9 சிக்சருடன் 92 (50) ரன்கள் குவித்து அற்புதமான தொடக்கம் கொடுத்தார்.

Moeen Ali

- Advertisement -

அதனால் 10 ஓவரில் 100 ரன்களுக்கு மேல் எடுத்திருந்த சென்னையை முக்கிய நேரத்தில் அம்பத்தி ராயுடு 12, பென் ஸ்டோக்ஸ் 7, ரவீந்திர ஜடேஜா 1, சிவம் துபே 19 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி கட்டுப்படுத்திய குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி, அல்சாரி ஜோசப் மற்றும் ரசித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 179 ரன்களை துரத்திய குஜராத்துக்கு தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 63 (36) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

போராடிய ருதுராஜ்:
அவருடன் ரிதிமான் சஹா 25 (16), சாய் சுதர்சன் 22 (17), விஜய் சங்கர் 27 (21) என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை எடுத்ததால் 19.2 ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து குஜராத் எளிதான வெற்றி பெற்றது. மொத்தத்தில் இந்த போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதன் காரணமாக சென்னை எடுத்த 178 ரன்களில் 92 (50) ரன்கள் குவித்து பாதிக்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து தனி ஒருவனாக போராடிய ருதுராஜ் கைக்வாட் போராட்டம் வீணானது.

Ruturaj Gaikwad CSk

இருப்பினும் 2020இல் 0, 5, 0 2021இல் 5, 5, 10 2022இல் 0, 1, 1 என கடந்த 3 சீசன்களின் முதல் 3 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வந்த அவர் இந்த சீசனில் முதல் போட்டியிலேயே பெரிய ரன்களை குவித்து அதிரடியை துவக்கியுள்ளது சென்னைக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அதை விட இந்த போட்டியில் 92 ரன்கள் குவித்த அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற ஜோஸ் பட்லர் சாதனை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ருதுராஜ் கைக்வாட் : 92, 2023*
2. ஜோஸ் பட்லர் : 89, 2022
3. ருதுராஜ் கைக்வாட் : 73, 2022
4. விராட் கோலி : 73, 2022

- Advertisement -

அத்துடன் தற்போதைய நடப்பு சாம்பியனாக இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் (218), அதிக சிக்ஸர்கள் (15), அதிக அரை சதங்கள் (3), அதிகபட்ச ஸ்கோர் (92) பதிவு செய்த வீரராகவும் ருதுராஜ் அசத்தி வருகிறார். அதை விட கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் இதுவரை விளையாடிய 37 இன்னிங்ஸில் 1299* ரன்கள் குவித்துள்ளார்.

Ruturaj gaikwad 73

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் தங்களுடைய முதல் 37 இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ருதுராஜ் கைக்வாட் : 1299*
2. சச்சின் டெண்டுல்கர் : 1271
3. ரிஷப் பண்ட் : 1184
4. சுரேஷ் ரெய்னா : 1102

இதையும் படிங்க:CSK vs GT : பவுலிங்கை விடுங்க நான் பேட்டிங்ல சிறப்பா விளையாட அவங்க 2 பேர் தான் காரணம் – ரஷீத் கான் பேட்டி

முன்னதாக உள்ளூர் தொடரிலும் தொடர்ந்து சதங்கள் அடித்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் சமீபத்திய விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்தார். அந்த வகையில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement