CSK vs GT : பவுலிங்கை விடுங்க நான் பேட்டிங்ல சிறப்பா விளையாட அவங்க 2 பேர் தான் காரணம் – ரஷீத் கான் பேட்டி

Rashid-Khan
- Advertisement -

நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது.

CSK vs GT

- Advertisement -

பின்னர் 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது துவக்கம் முதலே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்துவீச்சின் போது இரண்டு விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் மூன்று பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 10 ரன்கள் குவித்த ரஷீத் கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அதிலும் குறிப்பாக கடைசி இரண்டு ஓவர்களின் போது வெற்றிக்கு 23 ரன்கள் தேவை என்றபோது களமிறங்கிய ரஷீத் கான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸரையும், இரண்டாவது பந்தில் பவுண்டரியையும் அடிக்க குஜராத் அணி தங்களது வெற்றியை அப்போதே உறுதி செய்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது.

Rashid Khan 1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற ரஷீத் கான் கூறுகையில் : இந்த போட்டியின் இக்கட்டான நிலையில் சிறப்பாக செயல்பட்டதற்காக எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த விருது வாங்கியது எனக்கு மீதமுள்ள தொடரிலும் விளையாடும் அளவிற்கு ஒரு எனர்ஜியை தந்துள்ளது. இந்த போட்டியில் மூன்று விதமான துறைகளிலும் நான் சிறப்பாக செயல்பட முயற்சித்தேன்.

- Advertisement -

பயிற்சிகளின் போது வெளிப்படுத்திய அனைத்தையும் நான் ஆட்டத்தில் கொண்டு வருகிறேன். பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதும் நாங்கள் ஆட்டத்திற்குள் வந்ததாக நினைக்கிறேன். அதுமட்டும் இன்றி நான் இப்படி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட காரணம் யாதெனில் வலைப் பயிற்சியின்போது அதிகளவில் பேட்டிங் பயிற்சியை மேற்கொள்கிறேன்.

இதையும் படிங்க : நல்லவேளை விராட் கோலி உதவியால் தப்பிச்சேன், 2019 உ.கோ’யில் நிகழ்ந்த கலக்கலப்பான பின்னனியை பகிர்ந்த சர்பராஸ் அஹமது

அது மட்டுமின்றி அணியின் பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ராவும், கேப்டன் ஹார்டிக் பாண்டியாவும் என்னுடைய பேட்டிங்கின் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்து என்னை ஊக்கப்படுத்துகின்றனர். அதுவே என்னுடைய இந்த சிறப்பான பேட்டிங்கிற்கு காரணம் என்று ரஷீத் கான் குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா மற்றும் பயிற்சியாளர் நெஹ்ராவை புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement