நல்லவேளை விராட் கோலி உதவியால் தப்பிச்சேன், 2019 உ.கோ’யில் நிகழ்ந்த கலக்கலப்பான பின்னனியை பகிர்ந்த சர்பராஸ் அஹமது

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக திகழும் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சனை காரணமாக ஆசிய மற்றும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன. அந்த வரிசையில் 2023 ஆசிய கோப்பை பிரச்சனையால் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் இவ்விரு கிரிக்கெட் அணிகளும் விளையாடுவது சந்தேகமாகவே இருந்து வருகிறது. அந்த நிலையில் கடைசியாக 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் செய்து ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் (140) 336/5 ரன்கள் குவித்த இந்தியா பின்னர் பாகிஸ்தானை 212/6 ரன்கள் கட்டுப்படுத்தி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக இந்தியாவுக்கு பல தருணங்களில் மிகப் பெரிய சவாலை கொடுத்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த நிறைய நட்சத்திர வீரர்கள் செயல்பாடுகளில் அசத்தும் அளவுக்கு கிரிக்கெட்டின் தொடர்பு மொழியாக இருந்து வரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதில் திண்டாடுபவர்களாகவே இருந்து வருகிறார்கள். அந்த வகையில் அந்த உலகக் கோப்பைக்கு முன்பாக கோப்பையை அறிமுகப்படுத்தி கேப்டன்கள் பங்கேற்ற புகைப்பட படப்பிடிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது ஆங்கிலம் தெரியாமல் தடுமாறியதை யாராலும் மறக்க முடியாது. அதாவது அந்த நிகழ்ச்சியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை பற்றி விவரிக்குமாறு அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

சமாளித்த சர்பராஸ்:
ஆனால் முழுமையாக ஆங்கிலம் பேச தெரியாத அவர் அருகில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலியிடம் முதலில் அந்த கேள்வியை கேட்குமாறு சொல்லி நிலைமையை சமாளித்தார். அதைத்தொடர்ந்து கச்சிதமாக நீண்ட நேரமாக விராட் கோலி பேசி முடித்த பின் மீண்டும் செய்தியாளர்களிடம் சர்பராஸ் அஹமது பக்கம் திரும்பினர். அப்போது “என்னுடைய பதிலும் விராட் கோலி சொன்னது தான். அதில் எந்த வித்தியாசமும் இல்லை” என்று சொன்ன அவர் மீண்டும் நிலைமையை சமாளித்தது அரங்கில் இருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. அதனால் அந்த சமயத்தில் சர்ப்ராஸ் அகமது கிண்டல்களுக்கும் உள்ளானார்.

இந்நிலையில் அந்த தருணத்தில் விராட் கோலி பேசிய ஆங்கிலத்தை பார்த்து வியந்ததாகவும் அவருடைய உதவியுடன் அந்த நிலையை சமாளித்ததாகவும் சர்பராஸ் அஹமது சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “அந்த நிகழ்வில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் மீது இருக்கும் எதிர்பார்ப்பு மற்றும் அந்த போட்டிகளுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுங்கள் என்று எங்களைப் போன்ற வீரர்களிடம் யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள் என செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர்”

- Advertisement -

” அப்போது நான் இதே கேள்வியை முதலில் நீங்கள் விராட் கோலியிடம் கேட்குமாறு சொன்னேன். அத்துடன் அருகில் அமர்ந்திருந்த விராட் கோலியிடம் பிரதர் நீங்கள் ஏன் இதற்கு பதிலளிக்க கூடாது? என்று கேட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து அவர் அந்த கேள்வி பற்றி ஆங்கிலத்தில் பதிலளிக்க துவங்கினார். நீண்ட நேரமாக மிகச் சிறப்பாக பதிலளித்த அவரைப் பார்த்த எனக்கு “பாய் நீங்க எப்போதான் பேசி முடிப்பீங்க” என்பது போல் தோன்றியது”

“ஏனெனில் அவர் தொடர்ந்து ஆங்கிலத்தில் பெரிய வார்த்தைகளை பயன்படுத்தி பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் இதையெல்லாம் யார் நமக்கு மொழி மாற்றம் செய்து கொடுப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மொத்தத்தில் அதை தொடர்ந்து கேட்ட நான் செய்தியாளர்கள் மீண்டும் என்னிடம் அந்த கேள்வியை எழுப்பிய போது என்னுடைய பதிலும் அதுவே என்று கூறினேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:CSK vs GT : சென்னை அணிக்கு எதிரான இந்த பிரமாதமான வெற்றிக்கு காரணம் இதுதான் – ஹார்டிக் பாண்டியா பேசியது என்ன?

பொதுவாக கிரிக்கெட்டில் ஆங்கிலத்தை விட சிறப்பாக செயல்படுவதற்கு நல்ல திறமை தான் அவசியமாகும். அந்த வகையில் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை கேப்டனாக தோற்கடித்து சாதனை படைத்த சர்ப்ராஸ் அகமது அந்த தருணத்தில் ஆங்கிலத்தில் அசத்தலாக பேச முடியவில்லை என்றாலும் விராட் கோலியின் உதவியுடன் அந்த இக்கட்டான நிலையை சமாளித்ததாக வெளிப்படையாக தெரிவிப்பது பாராட்டுக்குரியதாகும்.

Advertisement