CSK vs GT : சென்னை அணிக்கு எதிரான இந்த பிரமாதமான வெற்றிக்கு காரணம் இதுதான் – ஹார்டிக் பாண்டியா பேசியது என்ன?

Hardik-Pandya
- Advertisement -

கடந்த ஆண்டு ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது தங்களது அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதனை தொடர்ந்து நடப்பு சாம்பியனாக ஐபிஎல் தொடரின் 16-வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள குஜராத் அணி நேற்று மார்ச் 31-ஆம் தேதி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த சீசனின் முதலாவது போட்டியில் ஜாம்பவான் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தங்களது முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரை பிரமாதமாக ஆரம்பித்துள்ளது.

CSK vs GT

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே குவிக்க 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 182 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்படி சென்னை அணியை வீழ்த்திய குஜராத் அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் நேற்றைய போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய பின்னர் இந்த வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா என்னென்ன விவரங்களை முன் வைத்தார் என்பது குறித்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். அதன்படி நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய பாண்டியா கூறுகையில் :

Tewatia

இந்த போட்டியில் வெற்றி பெற்றது உண்மையிலேயே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் நாங்களே எங்களை இக்கட்டான சூழ்நிலையில் தள்ளிக்கொண்டோம். ஆனாலும் இறுதியில் திவாட்டியா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் மிகச் சிறப்பாக போட்டியை முடித்துக் கொடுத்தனர். இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் சென்னை அணி 200 ரன்களை கடக்கும் என்று நினைத்தோம்.

- Advertisement -

ஆனால் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்த இரண்டு விக்கெட்டுகளை சரியான நேரத்தில் நாங்கள் கைப்பற்றியதால் சென்னை அணியை கட்டுக்குள் வைக்க முடிந்தது. அதேபோன்று இம்பேக்ட் ரூல்ஸ் என்னுடைய பணியை இன்னும் சவாலாக மாற்றியுள்ளது. ஏனெனில் நிறைய ஆப்ஷன்கள் இருப்பதினால் என்ன செய்வது என்று புரியவில்லை. அதனால் ஒரு சில பவுலர்கள் குறைவாகவும் பந்துவீச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : CSK vs GT : முதல் போட்டியிலேயே நாங்கள் பெற்ற இந்த தோல்விக்கு இதுதான் காரணம் – தோனி பேசியது என்ன?

இந்த போட்டியில் அல்சாரி ஜோசப் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அதேபோன்று இந்த போட்டியில் நானும் சுப்மன் கில்லும் தவறான ஷாட்டின் மூலமாக ஆட்டம் இழந்துள்ளோம் அதனை சரிசெய்தாக வேண்டும். நாங்கள் பொறுப்புடன் விளையாடினால் தான் பின்வரிசையில் இருப்பவர்களுக்கும் அது நம்பிக்கையை தரும் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement