CSK vs GT : முதல் போட்டியிலேயே நாங்கள் பெற்ற இந்த தோல்விக்கு இதுதான் காரணம் – தோனி பேசியது என்ன?

MS-Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16-வது சீசனுக்கான முதல் போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது.

csk vs gt

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் களம் இறங்கி விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது. பின்னர் 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்படி இந்த தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் :

Moeen Ali

இந்த போட்டியில் இரண்டாவதாக நாங்கள் பந்துவீசும் போது டியூ இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் இன்னும் கூடுதலாக ரன்களை குவித்திருக்க வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவரைப் போன்று இளம் வீரர்கள் தங்களது சிறப்பான செயல்பாட்டை முன்வைத்து விளையாட வேண்டும்.

- Advertisement -

அதேபோன்று இந்த போட்டியில் நாங்கள் இன்னும் கூடுதலாக ரன்களை குவித்திருக்க வேண்டும். ராஜ்வர்தன் ஹங்கரேக்கர் மிகச் சிறப்பாக பந்து வீசினார். ஆனாலும் பவுலர்கள் சிலர் நோபால் வீசியிருக்கக் கூடாது. இருந்தாலும் நோபால் வீசுவது என்பது பவுலர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. இருந்தாலும் அந்த விஷயத்தில் நாம் இன்னும் கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : IPL 2023 : ஆர்சிபி அணியிலிருந்து வெளியேறிய பின் இதர அணிகளில் அபாரமாக செயல்பட்ட 4 நட்சத்திர வீரர்கள்

அதேபோன்று இந்த போட்டியில் நமது பந்துவீச்சு சிறப்பாக இருந்ததாகவே நினைக்கிறேன். இருப்பினும் வெற்றிக்கு இன்னும் கூடுதலாக ரன்களை குவித்திருக்க வேண்டும் என தோல்விக்கான காரணத்தை தோனி பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement