ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் துவங்கியது. இந்த சீசனில் கோப்பையை வெல்ல களமிறங்கும் 10 அணிகளுக்கு மத்தியில் தங்களது முதல் லட்சிய கோப்பையை வெல்லும் முனைப்புடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு களமிறங்குகிறது. கடந்த 15 வருடங்களாக அனில் கும்ப்ளே முதல் விராட் கோலி வரை மகத்தான கேப்டன்களின் தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற நிறைய உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் விளையாடியும் முக்கிய நேரங்களில் சொதப்பும் அந்த அணி கோப்பையை வெல்ல முடியாமல் நிறைய கிண்டல்களை சந்தித்து வருகிறது. மேலும் ஓரிரு தோல்விகளை சந்தித்தால் அதற்காக பதற்றமடைந்து 11 பேர் அணியில் அதிரடியான மாற்றங்களை நிகழ்த்துவதும் அந்த அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதனால் எங்கே தங்களது இடம் பறிபோய் விடுமோ என்ற எண்ணத்திலேயே களத்தில் பெங்களூரு அணிக்காக தடுமாற்றமாக செயல்பட்ட சில வீரர்கள் அதிலிருந்து வெளியேறி வேறு அணிக்காக விளையாடிய போது சிறப்பாக செயல்பட்ட கதைகள் ஏராளமாகும். அதற்கு எடுத்துக்காட்டாக திகழும் சில வீரர்களை பற்றி பார்ப்போம்:
4. கேஎல் ராகுல்: பெங்களூருவில் பிறந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் முதலில் பெங்களூரு அணியில் தேர்வானார். ஆனால் முதல் சீசனில் குறைவான வாய்ப்புகளில் 20 ரன்கள் எடுத்ததால் கழற்றி விடப்பட்ட அவர் ஹைதெராபாத் அணிக்காக வாங்கப்பட்டு மீண்டும் 2016இல் பெங்களூரு அணியில் விளையாடினார்.
அந்த சீசனில் 397 ரன்கள் எடுத்து ஓரளவு சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் அவரை பெங்களூரு கழற்றி விட்டது. அதைத்தொடர்ந்து 2018இல் 11 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு விளையாடிய அவர் 659 ரன்களை விளாசி 2022 வரை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட ரன்களை வெளுத்து வாங்கி தன்னுடைய ஐபிஎல் மார்க்கெட்டை 17 கோடிக்கு உயர்த்தி தற்போது லக்னோ அணியின் கேப்டனாக முன்னேறியுள்ளார்.
3. குயின்டன் டீ காக்: தென்னாபிரிக்காவை சேர்ந்த இவர் 2016 சீசனில் டெல்லி அணிக்காக 445 ரன்கள் எடுத்தும் கழற்றி விடப்பட்டார். அதன் பின் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட இவருக்கு பிரண்டன் மெக்கலம் இருந்ததால் போதிய வாய்ப்பு கிடைக்காமல் 8 போட்டிகளில் 201 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதை தொடர்ந்து 2019இல் மும்பை அணிக்காக வாங்கப்பட்ட அவர் 529 ரன்களை விளாசி அந்த வருடமும் அதற்கடுத்த வருடமும் அடுத்தடுத்த கோப்பைகளை கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றினார். கடந்த வருடம் லக்னோ அணியிலும் அதிரடியாக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் இந்த சீசனில் விளையாட தயாராகி வருகிறார்.
3. மொய்ன் அலி: இங்கிலாந்தின் அதிரடி ஆல் ரவுண்டரான இவர் 2018, 2019, 2020 சீசனங்களில் பெங்களூரு அணிக்காக விளையாடி 77, 220, 12 ரன்கள் 3, 6, 1 விக்கெட்களை எடுத்து எதிர்பார்த்த செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. அதனால் அந்த அணி நிர்வாகம் கழற்றி. விட்ட இவர் சென்னை அணியில் 2021 சீசனில் 357 ரன்களையும் 6 விக்கெட்களையும் எடுத்து 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
அதே போல் கடந்த வருடமும் 10 போட்டிகளில் 224 ரன்களையும் 8 விக்கெட்களையும் எடுத்த அவர் பெங்களூரு அணியை விட சென்னை அணியில் தோனி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
1. ஷேன் வாட்சன்: ஆஸ்திரேலியாவின் மகத்தான ஆல் ரவுண்டான இவர் 2008இல் ராஜஸ்தான் முதல் கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. இருப்பினும் பெங்களூரு அணியில் 24 போட்டிகளில் 250 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் 2016 ஃபைனலில் தோல்வியை சந்திக்க காரணமாகும் வகையில் சுமாராகவே செயல்பட்டார்.
இதையும் படிங்க:சூப்பர் பவர் இருக்குன்னு ஆணவ திமிர்ல ஆடாதீங்க, 2 விஷயங்களுக்காக இந்தியாவை நேரடியாக விமர்சித்த இம்ரான் கான்
ஆனால் 2018ஆம் ஆண்டு சென்னை அணிக்கு வாங்கப்பட்ட அவர் எம்எஸ் தோனி தலைமையில் தனது கேரியரிலேயே உச்சகட்டமாக 15 போட்டிகளில் 555 ரன்கள் விளாசி ஹைதராபாத் அணிக்கு எதிரான மாபெரும் ஃபைனலில் சதமடித்து சென்னை 3வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். மேலும் 2021 ஐபிஎல் ஃபைனலில் மும்பைக்கு எதிராக முழங்காலில் ரத்தம் சொட்ட சொட்ட வெற்றிக்கு போராடி தமிழக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த அவர் கடந்த வருடம் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.