சூப்பர் பவர் இருக்குன்னு ஆணவ திமிர்ல ஆடாதீங்க, 2 விஷயங்களுக்காக இந்தியாவை நேரடியாக விமர்சித்த இம்ரான் கான்

- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன. ஆனால் அந்த வரிசையில் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா பங்கேற்காது என்று அறிவித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். இருப்பினும் ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் நீங்கள் தங்களிடம் கேட்காமல் இப்படி பேசியது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் வரும் அக்டோபரில் இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அறிவித்துள்ளது.

Jay Shah IND vs PAk

- Advertisement -

அதனால் கடந்த சில மாதங்களாகவே இந்த விவகாரம் பற்றி இருநாட்டுக்கு இடையே பல்வேறு சர்ச்சையான கருத்துக்களும் அனல் பறக்கும் விமர்சனங்களும் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற இதர நாடுகளை காட்டிலும் ஐசிசிக்கு அதிக வருமானத்தை சம்பாதித்துக் கொடுக்கும் இந்தியா ஆசிய கவுன்சிலில் கிடைக்கும் வருமானத்தை பாகிஸ்தான், இலங்கை போல பங்கு போடாமல் அதற்கும் நிதியுதவி வழங்கும் நாடக இருந்து வருகிறது.

ஆணவத்துல ஆடாதீங்க:
அதனால் இந்த விவகாரத்தில் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் ஜெய் ஷா எடுக்கும் முடிவுக்கு ஐசிசியும் எதிர்ப்பு தெரிவிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக இந்த விவகாரத்தில் என்ன தான் வாயில் பேசினாலும் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது என்றே நம்பப்படுகிறது. இது போக ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடருக்கு நிகரான தரத்தையும் கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமாக கொட்டிக் கொடுக்கும் ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதற்கும் பிசிசிஐ ஏற்கனவே தடை விதித்துள்ளது.

Pakistan

குறிப்பாக ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 காலகட்டத்தில் ஷாஹித் அப்ரிடி, சோயப் அக்தர் உள்ளிட்ட நட்சத்திர பாகிஸ்தான் வீரர்கள் பல்வேறு அணிகளில் விளையாடினார்கள். ஆனால் அந்த சமயத்தில் இந்தியாவுக்கு நேர்ந்த ஒரு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுக்கு பாகிஸ்தான் முக்கிய காரணமாக இருந்ததால் அப்போது முதல் அந்நாட்டு வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிசிசிஐ விதித்த அதிரடியான தடை இன்னும் நீடிக்கிறது. அதனால் பாபர் அசாம், ஷாஹின் அப்ரிடி போன்ற தரமான பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் ஐசிசி மற்றும் சர்வதேச கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் அளவுக்கு சூப்பர் பவர் கொண்டுள்ள இந்தியா ஆணவ திமிரில் பாகிஸ்தான் எப்படி விளையாட வேண்டும் எங்கே விளையாட வேண்டும் என்பதை நிர்ணயிக்க முயற்சிப்பதாக முன்னாள் ஜாம்பவான் கேப்டன் மற்றும் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் தொடரில் பங்கேற்க விடாமல் செய்தாலும் பாகிஸ்தானால் தரமான இளம் வீரர்களை உருவாக்க முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கிடையே இந்த மாதிரியான சுமாரான உறவுகள் இருப்பது சோகமானது. இருப்பினும் உலக கிரிக்கெட்டின் சூப்பர் பவரை கொண்டிருப்பதால் இந்தியாவிடம் தற்போது அதிகப்படியான ஆணவ செயல்பாடுகள் காணப்படுகின்றன. ஏனெனில் அவர்கள் உலகின் இதர நாடுகளை காட்டிலும் அதிக வருமானத்தை சம்பாதிக்கிறார்கள். அந்த சூப்பர் பவரால் ஏற்பட்டுள்ள ஆணவத்தால் அவர்கள் தற்போது யாருடன் விளையாட வேண்டும் யாருடன் விளையாடக்கூடாது என்பதை நிர்ணயிக்க முயற்சிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க:GT vs CSK : குஜராத்துக்காக வெச்சு செய்த தமிழக வீரர்கள், முதல் போட்டியிலேயே சென்னையின் தோல்விக்கான காரணங்கள் இதோ

“குறிப்பாக பாகிஸ்தான் வீரர்களை இந்திய வாரியம் ஐபிஎல் தொடரில் அனுமதிக்காதது எனக்கு வினோதமாக இருக்கிறது. அது அவர்களுடைய வெறும் திமிர்த்தனமாக இருக்கிறது. ஒருவேளை ஐபிஎல் தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா அனுமதி கொடுக்காவிட்டால் அதற்காக பாகிஸ்தான் கவலைப்பட கூடாது. ஏனெனில் பாகிஸ்தானில் எப்போதும் தரமான இளம் கிரிக்கெட் வீரர்கள் நிறைந்துள்ளார்கள்” என்று கூறினார்.

Advertisement