GT vs CSK : குஜராத்துக்காக வெச்சு செய்த தமிழக வீரர்கள், முதல் போட்டியிலேயே சென்னையின் தோல்விக்கான காரணங்கள் இதோ

- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த 2023 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் நகரில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியது. இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு டேவோன் கான்வே 1 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்து வந்த மொயின் அலி மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் உடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 34 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 பவுண்டரி 1 சிக்சருடன் 23 (17) ரன்களில் அவுட்டானார்.

அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 7 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக களமிறங்கிய அம்பத்தி ராயுடு 4வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 12 (12) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் அசத்திய ருத்ராஜ் கைக்வாட் 4 பவுண்டரி 9 சிக்ஸருடன் 92 (5)) ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ஆட்டமிழந்தார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா 1, சிவம் துபே 19 (18) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து குறைவான ரன்களில் அவுட்டான நிலையில் கடைசி நேரத்தில் கேப்டன் தோனி 14* (7) ரன்கள் விளாசி ஓரளவு நல்ல பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

ஆனாலும் 10 ஓவரில் 100 ரன்கள் எடுத்த சென்னை 20 ஓவர்களில் 178/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு டெத் ஓவரில் அசத்திய குஜராத் சார்பில் அதிகபட்சமாக ஷமி, அல்சாரி ஜோசப் மற்றும் ரசித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அந்த நிலையில் ராயுடுக்கு பதிலாக துஷார் தேஷ்பாண்டேவும் காயமடைந்த கேன் வில்லியம்சனுக்கு பதிலாக சாய் சுதர்சனும் இரு அணிகள் சார்பாக இம்பேக்ட் விதிமுறையை பயன்படுத்தி களமிறங்கினார்கள்.

அதைத்தொடர்ந்து 179 ரன்களை துரத்திய குஜராத்துக்கு தலா 2 பவுண்டரி சிக்சரை பறக்க விட்ட ரித்திமான் சஹா 25 (16) ரன்கள் விளாசி அவுட்டான நிலையில் அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் கைகோர்த்த சுப்மன் கில் 2வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். அப்போது சுதர்சன் 3 பவுண்டரியுடன் 22 (17) ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் பாண்டியா 8 (11) ரன்னில் ஜடேஜாவின் சுழலில் சிக்கினார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட சுப்மன் கில் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 63 (36) ரன்கள் விளாசி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த போது 15வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அப்போது குஜராத்தின் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மற்றொரு தமிழக வீரர் 2 பவுண்டரி 1 சிக்ஸரை விளாசி 27 (21) ரன்களை அடித்து அச்சுறுத்தலை கொடுத்து ஓவரில் அவுட்டானார். இறுதியில் அடுத்து வந்த ரசித் கான் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 10* (3) ரன்களும் ராகுல் திவாடியா 15* (14) ரன்களும் எடுத்ததால் 19.2 ஓவரிலேயே 182/5 ரன்கள் எடுத்த குஜராத் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. சென்னை சார்பில் அதிகபட்சமாக ராஜ்வர்தன் ஹங்கரேக்கர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

முன்னதாக இந்த போட்டியில் ருதுராஜ் ஒருபுறம் அதிரடியாக செயல்பட்டாலும் எதிர்ப்புறம் பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா உள்ளிட்ட முக்கிய சென்னை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக செயல்பட தவறியதால் ஒரு கட்டத்தில் 10 ஓவரில் 100 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி இறுதியில் 200 ரன்களை எடுக்க தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதே போல பந்து வீச்சில் இம்பேக்ட் வீரராக வந்த துஷார் டேஷ்பாண்டே வள்ளலாக ரன்களை வாரி வழங்கியது சென்னையின் எஞ்சிய தோல்வியையும் உறுதி செய்தது.

இதையும் படிங்க: வீடியோ : 41 வயதிலும் அனலாக பறந்த 200வது சாதனை சிக்ஸர், சூப்பர் பினிஷிங் கொடுத்த தல தோனி – ரசிகர்கள் முக்கிய கோரிக்கை

மறுபுறம் டெத் ஓவரில் கச்சிதமாக செயல்பட்ட குஜராத்துக்கு  பேட்டிங்கில் சுப்மன் கில்லுடன் இம்பேக்ட் வீரராக வந்த சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகிய 2 தமிழக வீரர்கள் முக்கிய ரன்களை விளாசி சென்னையை வெச்சு செய்து இந்த சீசனில் முதல் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தனர்.

Advertisement