விராட் கோலி மற்றும் குப்தில் சாதனை உடைப்பு.. ஆஸ்திரேலிய அணிக்கெதிராக – ருதுராஜ் கெய்க்வாட் அபாரம்

Ruturaj-Gaikwad
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அடைந்த வெற்றியுடன் சேர்த்து இந்திய அணி நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு தற்போது ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

- Advertisement -

அதன் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு துவக்க வீரருக்கான இடத்தோடு சேர்த்து துணை கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த தொடரில் தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த இந்த 5-ஆவது டி20 போட்டியில் 10 ரன்களை அவர் அடித்ததன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மற்றும் நியூசிலாந்து அணியின் துவக்க வீரரான மார்ட்டின் குப்தில் ஆகியோரது சாதனையை உடைத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் 12 பந்துகளை சந்தித்த ருதுராஜ் கெய்க்வாட் 10 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து இருந்தாலும் இந்த தொடரின் 5 போட்டிகளையும் சேர்த்து 223 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு தொடரில் அதிகபட்சமாக அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக தற்போது முதலிடத்திற்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க : ஒன்னு இல்ல ரெண்டு டைம்.. ஆஸியின் வெற்றி பறிபோக அவர் தான் காரணம்.. மேத்தியூ ஹெய்டன் விமர்சனம்

இந்த பட்டியலில் மார்ட்டின் குப்தில் 218 ரன்களை எடுத்து முதலிடத்திலும், 199 ரன்கள் எடுத்து விராட் கோலி இரண்டாவது இடத்திலும், டேவான் கான்வே 192 ரன்களை எடுத்து மூன்றாவது இடத்திலும் இருந்தனர். இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த இந்த 223 ரன்கள் மூலம் தற்போது விராட் கோலி மற்றும் மார்ட்டின் குப்தில் ஆகியோரை கடந்து ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் கெய்க்வாட் இன்னும் 9 ரன்கள் அடித்திருந்தால் ஒரு தொடரில் அதிக டி20 ரன்களை அடித்த இந்திய வீரராக இருக்கும் விராட் கோலியின் சாதனையையும் அவரால் முறியடித்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement