ஒன்னு இல்ல ரெண்டு டைம்.. ஆஸியின் வெற்றி பறிபோக அவர் தான் காரணம்.. மேத்தியூ ஹெய்டன் விமர்சனம்

Matthew Hayden
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக 2023 உலகக்கோப்பை ஃபைனலில் வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா புதிய சாம்பியனாக மிகப்பெரிய சரித்திரம் படைத்தது. அதைத்தொடர்ந்து மீண்டும் இந்தியாவுக்கு எதிராக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் சுமாராக விளையாடிய ஆஸ்திரேலியா 4 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து நாடு திரும்பியது.

குறிப்பாக பெங்களூருவில் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அக்சர் பட்டேல் 31, ஸ்ரேயாஸ் 53 ரன்கள் எடுத்த உதவியுடன் வெறும் 161 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை துரத்திய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஹெய்டன் விமர்சனம்:
அப்போட்டியில் பென் டெக்மோர்ட் 54 (36) ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் கடைசி நேரத்தில் கேப்டன் மேத்யூ வேட் அதிரடியாக விளையாடி 22 (15) ரன்கள் எடுத்ததால் வெற்றியை நெருங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய அர்ஷிதீப் சிங் முதல் பந்தை பவுன்சராக வீசினார். அப்போது மேத்தியூ வேட் ஹூக் ஷாட் அடிக்க முயற்சித்தும் பந்து தலைக்கு மேல் சென்றதால் தொட கூட முடியாமல் விட்டார்.

அதனால் அம்பயர் ஓய்ட் கொடுப்பார் என்று மேத்யூ வேட் எதிர்பார்த்தார். ஆனால் அம்பயர் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்ததால் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய அவர் 3வது பந்தில் அவுட்டாகி சென்றார். அதைத்தொடர்ந்து கடைசி 2 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்ட போது 5வது பந்தை எதிர்கொண்ட நாதன் எலீஸ் நேராக பவுண்டரி அடிக்க முயற்சித்தார்.

- Advertisement -

அதை அர்ஷிதீப் தடுக்க முயற்சித்தும் கைநழுவி சென்ற பந்து எதிரே நின்ற நடுவர் மீது பட்டது. அந்த வகையில் பவுண்டரி செல்ல வேண்டிய பந்து குறுக்கே அம்பயர் வந்ததால் கடைசியில் ஆஸ்திரேலியாவுக்கு 1 ரன்னை மட்டுமே கொடுத்தது. அந்த வகையில் அந்த 2 பந்துகளில் நடுவர்கள் ஆஸ்திரேலியாவின் வெற்றி பறிபோவதற்கு காரணமாகும் வகையில் நடந்து கொண்டதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் முன்னாள் வீரர் மேத்தியூ ஹெய்டன் விமர்சித்து பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: ஒருநாள் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவுக்கு இனிமே இடமில்லை.. அவரது இடத்தை பிடித்த இளம்வீரர் – விவரம் இதோ

“ஒய்ட் கொடுக்காததால் வேட் ஏமாற்றத்துடன் இருப்பதை நீங்கள் பாருங்கள். கண்டிப்பாக தலைக்கு மேலே சென்ற அந்த பந்து ஒய்டாகும். அதே போல 5வது பந்தை தடுத்து ஒரே ஓவரில் அம்பயர் தன்னுடைய வேலையை 2வது முறையாக செய்துள்ளார். முதல் பந்தில் பக்கவாட்டு பகுதியில் இருந்து வேலையை செய்த அவர் தற்போது நேராக நின்று செய்துள்ளார். அவர்கள் (இந்தியா மற்றும் அம்பயர்கள்) ஒன்று சேர்ந்து அணியாக இங்கே விளையாடுகிறார்கள்” என்று கூறினார்.

Advertisement