ஒருநாள் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவுக்கு இனிமே இடமில்லை.. அவரது இடத்தை பிடித்த இளம்வீரர் – விவரம் இதோ

Ravindra-Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நேற்று டிசம்பர் 3-ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான மூன்று விதமான இந்திய அணிகளும் தனித்தனி கேப்டன்களுக்கு கீழ் அறிவிக்கப்பட்ட வேளையில் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் சீனியர் வீரர்கள் பலரும் இடம் பெறவில்லை.

- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தை அடுத்து சீனியர்கள் பலருக்கும் ஓய்வு வழங்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ரவீந்திர ஜடேஜாவிற்கும் இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் அணியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க தொடர் மட்டுமின்றி இனிவரும் ஒருநாள் தொடர்களில் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவது சற்று கடினமான விடயமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் தற்போது 34 வயதை எட்டியுள்ள ஜடேஜா இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே விளையாட முடியும் என்பதனால் அவரை அணியிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக இளம்வீரரை அந்த இடத்திற்கு கொண்டு வரும் திட்டத்தை பிசிசிஐ கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : ரொம்ப தேங்க்ஸ் சார்.. அம்பயரால் கடுப்பான ஆஸி வீரர்கள்.. இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி.. நடந்தது என்ன?

அந்த வகையில் 29 வயதான அக்சர் பட்டேல் அவரது இடத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான இவர் சுழற் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி பின் வரிசையில் பேட்டிங்கிலும் கை கொடுக்கக் கூடியவர் என்பதனால் இனி ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை அக்சர் பட்டேலே நிரப்புவார் என்று பலராலும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement