ரொம்ப தேங்க்ஸ் சார்.. அம்பயரால் கடுப்பான ஆஸி வீரர்கள்.. இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி.. நடந்தது என்ன?

Matthew Wade 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 2023 உலகக் கோப்பை ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் சூரியகுமார் யாதர் தலைமையில் களமிறங்கிய இத்தொடரில் இளம் இந்திய அணி வெற்றி கண்டது ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது.

முன்னதாக பெங்களூருவில் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஸ்ரேயாஸ் ஐயர் 53, அக்சர் பட்டேல் 31 ரன்கள் எடுத்த உதவியுடன் 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு பென் டெக்மோர்ட் அதிரடியாக விளையாடி 54 (36) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ரொம்ப தேங்க்ஸ் அம்பயர்:
இருப்பினும் இதர வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் கடைசி நேரத்தில் கேப்டன் மேத்தியூ வேட் அதிரடியாக 22 (15) ரன்கள் எடுத்ததால் வெற்றியை நெருங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கடைசி ஓவரில் வெறும் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதில் அர்ஷிதீப் சிங் முதல் 4 பந்துகளில் சிறப்பாக செயல்பட்டு மேத்யூ வேடை அவுட்டாக்கியதால் கடைசி 2 பந்துகளில் ஆஸ்திரேலியாவுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது 5வது பந்தை எதிர்கொண்ட நாதன் எலீஸ் நேராக அடித்த பவுண்டரியை அர்ஷிதீப் தடுக்க முயற்சித்தும் தாண்டி சென்ற பந்து எதிரே நின்ற அம்பயர் மீது பட்டது. அந்த தருணத்தில் முடிந்தளவுக்கு அம்பயர் ஒதுங்க நினைத்த போதிலும் அவர் மீது பந்து பட்டதால் ஆஸ்திரேலியாவுக்கு கிடைக்க வேண்டிய பவுண்டரி வெறும் 1 ரன்னாக மட்டுமே கிடைத்தது.

- Advertisement -

ஒருவேளை அந்த பந்துக்கு நடுவர் குறுக்கே வராமல் பவுண்டரி போயிருந்தால் கடைசி பந்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு இன்னும் சற்று அதிகமான வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம். அப்படி தங்களின் வெற்றியை மறைமுகமாக பறித்த அம்பயர் மீது கேப்டன் மேத்தியூ வேட் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் கடுப்பான ரியாக்சனை கொடுத்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: ரொம்ப தேங்க்ஸ் சார்.. அம்பயரால் கடுப்பான ஆஸி வீரர்கள்.. இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி.. நடந்தது என்ன?

மறுபுறம் முக்கிய நேரத்தில் அதிர்ஷ்டம் போல குறுக்கே நின்று இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த நடுவருக்கு ரொம்ப தேங்க்ஸ் சார் என்று இந்திய ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் 2023 உலகக் கோப்பையை தான் எங்களால் வெல்ல முடியவில்லை குறைந்தபட்சம் இந்த தொடரையாவது வென்றோமே என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இதை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியா தயாராகி வருகிறது.

Advertisement