இங்கிலாந்துக்கு எதிரா சதமடிக்க தோனி சொன்ன அந்த வார்த்தைகள் தான் காரணம்.. ஷாய் ஹோப் பேட்டி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. டிசம்பர் 3ஆம் தேதி ஆன்ட்டிகுவா நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 71, ஜாக் கிராவ்லி 48 ரன்கள் எடுத்தனர்.

அதை சேசிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதனேஷ் 66 (65) ப்ரண்டன் கிங் 35 (44) ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர் அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய கேப்டன் சாய் ஹோப் 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் அபாரமான சதமடித்து 109* (83) ரன்கள் குவித்தார். அவருடன் சிம்ரோன் ஹெட்மேயர் 32 (30) ரோமரியா செபார்ட் 49 (28) ரன்கள் எடுத்ததால் 48.5 ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

- Advertisement -

தோனியின் உத்வேகம்:
அந்த வகையில் 2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியும் சந்தித்த படுதோல்வியிலிருந்து இன்னும் மீளாத இங்கிலாந்து இத்தொடரின் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. மறுபுறம் 2023 உலகக் கோப்பைக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்தை தோற்கடித்து வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த வெற்றிக்கு சதமடித்து 109* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனியுடன் பேசிய போது அவர் கொடுத்த சில ஆலோசனைகள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியதாக சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் நீண்ட நாட்கள் கழித்து வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “வெற்றி பெற்ற போட்டியில் என்னுடைய சதம் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. சில காலங்கள் முன்பாக நான் எம்எஸ் தோனியிடம் பேசினேன். அப்போது நீங்கள் நினைப்பதை விட எப்போதுமே உங்களுக்கு களத்தில் அதிக நேரம் இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் என்னிடம் கூறினார். அந்த வார்த்தைகள் என்னுடன் ஒட்டிக்கொண்டது”

இதையும் படிங்க: 325 ரன்ஸ்.. இங்கிலாந்தை ஓடவிட்டு பவரை காட்டிய ஷாய் ஹோப்.. வெ.இ வெற்றி பாதைக்கு திரும்பியது எப்படி?

“செபார்ட் சிறப்பாக விளையாடினார். இத்தொடரின் ஆரம்பத்திலேயே வெற்றியை பெற்றுள்ள நாங்கள் அதை அடுத்த போட்டியிலும் தொடர்வோம் என்று நம்புகிறேன். எங்களின் தொடக்க வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். இதே போன்ற துவக்கத்தை அடுத்த போட்டியில் அவர்கள் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இருப்பினும் உலகின் சிறந்த அணியாக நீங்கள் இருப்பதற்கு சில கேட்ச்களை தவற விடக்கூடாது. இதே நல்ல செயல்பாடுகளை நாங்கள் அடுத்த போட்டிகளிலும் தொடர்வதற்கு பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement