ஆமைவேக துவக்கம்.. 215 ஸ்ட்ரைக் ரேட்டில் மாஸ் ஃபினிஷிங்.. ஆஸியை பொளந்த ருதுராஜ் அபார சாதனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி நவம்பர் 28ஆம் தேதி இரவு 7 மணிக்கு அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தி நகரில் துவங்கியது.

அதில் 2023 உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா இத்தொடரை வெல்வதற்கு நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 6 ரன்னில் அவுட்டாக அடுத்ததாக வந்து தடுமாறிய இசான் கிசான் டக் அவுட்டாக்கி மாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

அதனால் 24/2 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 39 (29) ரன்களில் அவுட்டாகி சென்றார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் நங்கூரமாக நின்று ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு சவாலை கொடுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார்

அதற்கு அடுத்ததாக வந்த திலக் வர்மா கை கொடுத்த நிலையில் எதிர்புறம் நிதானத்தை காட்டிய ருதுராஜ் ஒரு கட்டத்தில் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறினார். ஆனால் ஆரம்பத்தில் ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் நன்கு செட்டிலான பின் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் அரை சதமடித்து வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். நேரம் செல்ல செல்ல இரு மடங்கு அதிரடியாக விளையாடிய அவர் 90 ரன்களைக் கடந்து கிளன் மேக்ஸ்வெல் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் அட்டகாசமான சிக்ஸருடன் தன்னுடைய முதல் டி20 சதத்தை அடித்தார்.

- Advertisement -

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சவாலான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற அபாரமான சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி போன்ற இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக மட்டுமே டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்திருந்தனர்.

இதையும் படிங்க: 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் தேவையில்லாத மாற்றத்தை செய்த சூரியகுமார் யாதவ் – என்ன ஆகப்போகுதோ?

அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 13 பவுண்டரி 7 சிக்ஸருடன் 123* (57) ரன்களை 215 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அவருடன் திலக் வர்மா தம்முடைய பங்கிற்கு 31* (24) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் பட்டைய கிளப்பிய இந்தியா 222/3 ரன்கள் குவித்து அசத்தியது. மறுபுறம் ஆரம்பத்தில் அசத்திய ஆஸ்திரேலியா கடைசியில் பந்து வீச்சில் கோட்டை விட்ட நிலையில் அதிகபட்சமாக கேன் ரிச்சர்ட்சன், பெரன்டாப், ஆரோன் ஹார்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Advertisement