- Advertisement -
ஐ.பி.எல்

ஒருவேளை ரிஷப் பண்ட் சி.எஸ்.கே அணிக்கு வந்தா யார் கேப்டன்? – கண்டிப்பா இதுதான் நடக்கும்

கடந்த சில நாட்களாகவே டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணிக்கு வர இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் யாதெனில் ரிஷப் பண்ட் டெல்லி அணியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் அதன் காரணமாக அடுத்த ஆண்டு அவர் அந்த அணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் மெகா ஏலத்தில் அவர் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

அவ்வாறு அவர் மெகா ஏலத்தில் கலந்து கொள்ளும்போது அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவரை ஏலத்தில் எடுக்க பலரும் போட்டியிடுவார்கள். அதே வேலையில் தோனி அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெற்று விடுவார் என்பதனால் ரிஷப் பண்ட் மீது சென்னை அணியும் அதிக நாட்டத்தை காண்பிக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் அவர் சென்னை அணிக்கு வரும் பட்சத்தில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா? என்பது குறித்து கேள்விகளும் அதிக அளவில் பரவி வருகிறது. ஏனெனில் கேப்டன்சியில் ருதுராஜ்யை விட அனுபவம் மிக்கவர் என்பதனாலும் தோனி போன்ற அதிரடியான விக்கெட் கீப்பர் என்பதனாலும் அவரை நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் சிஎஸ்கே வட்டாரத்தில் இருந்து கசிந்த தகவலின் படி ரிஷப் பன்ட் சென்னை அணிக்கு வந்தாலும் ருதுராஜ் கெய்க்வாட் தான் கேப்டனாக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தோனி போன்ற ஒரு மாபெரும் வீரரே தனது கேப்டன்சி பதிவியை ருதுராஜிடம் வழங்கியிருக்கின்றார்.

- Advertisement -

மேலும் அவரை கேப்டனாக்குவதற்கு முன்னதாகவே சில ஆண்டுகள் அவருக்கு கேப்டன்சி பயிற்சியும் வழங்கப்பட்டது. அதோடு தோனியை ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையின் கீழ் விளையாடி வரும் போது எந்த ஒரு நட்சத்திர வீரர் சென்னை அணியில் இடம் பிடித்தாலும் அவரது தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்று சிஎஸ்கே சார்பாக உறுதியாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இதுக்காக அரிதான பாண்டியா வருத்தப்படக் கூடாது.. இப்போவும் கேப்டன்ஷிப் கிடைக்க வாய்ப்பிருக்கு.. உத்தப்பா பேட்டி

அடுத்த ஆண்டு தோனி ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறும் பட்சத்தில் அவரது இடத்தினை நிரப்பப்போகும் வீரர் யார் என்பதே பலரது மத்தியிலும் கேட்கப்பட்டு வரும் கேள்வியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -