இதுக்காக அரிதான பாண்டியா வருத்தப்படக் கூடாது.. இப்போவும் கேப்டன்ஷிப் கிடைக்க வாய்ப்பிருக்கு.. உத்தப்பா பேட்டி

Robin Uthappa 2
- Advertisement -

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக சூரியகுமார் யாதவ் செய்யப்பட்டுள்ளார். உண்மையில் 2022க்குப்பின் ரோகித் சர்மா ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையிலும் துணை கேப்டனாக செயல்பட்ட அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதனால் அடுத்த டி20 கேப்டனாக பாண்டியா நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

இருப்பினும் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் ஃபிட்னஸ் காரணமாக பாண்டியா அனைத்து தொடர்களிலும் விளையாடுவதில்லை என்று கருதுகிறார். எனவே அவரை துணை கேப்டனாக கூட தேர்ந்தெடுக்காமல் மொத்தமாக கழற்றி விட்டுள்ள கம்பீர் புதிய கேப்டனாக சூரியகுமாரை தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் அப்படி திடீரென கழற்றி விட்ட தேர்வுக்குழு பாண்டியாவுக்கு அநியாயத்தை செய்து விட்டதாக ஸ்ரீகாந்த், சஞ்சய் பங்கர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

இப்போவும் வாய்ப்பிருக்கு:
இந்நிலையில் வேகப்பந்து வீச்சு பேட்டிங் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இதற்காக வருந்தக்கூடாது என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். அத்துடன் சூரியகுமார் காயத்தை சந்தித்தால் டி20 கேப்டன்ஷிப் பாண்டியாவுக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் பாண்டியாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் குறிப்பிட்ட அளவிற்கு என்னை கவனித்துக் கொள்வேன்”

“ஏனெனில் இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்து ஆல் ரவுண்டர் என்பது மிகவும் அரிதான பொருளாகும். குறிப்பாக நான் பாண்டியாவை போல 34 – 35 வயதுடைய ஒருவராக காயத்தை சந்திப்பவராக இருந்தால் நீண்ட காலம் தொடர்ந்து விளையாடுவதற்கு விரும்புவேன். அந்த வேலையில் கேப்டன்ஷிப் பறிக்கப்பட்டால் பரவாயில்லை நாட்டுக்காக சரி என்று நான் சொல்வேன். ஆம் இந்தியாவின் கேப்டனாக நாட்டை வழி நடத்துவது நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரிய கௌரவம்”

- Advertisement -

“இருப்பினும் கேப்டன்ஷிப் பொறுப்பு இல்லாமலேயே நீண்ட காலம் விளையாடி உங்களால் நாட்டுக்காக முடிந்தளவுக்கு நிறைய சாம்பியன் பட்டங்களை வென்று கொடுக்க முடியும். தற்போது பாண்டியாவால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தயாராக இருக்க முடிகிறது. எனவே அவரது இடத்தில் நான் இருந்தால் அனைத்தையும் கடவுளின் கையில் விட்டு விடுவேன்”

இதையும் படிங்க: இந்தியாவை வீழ்த்த புதிய கேப்டன், புதிய ஜாம்பவான் பயிற்சியாளர் தலைமையில்.. இலங்கை அணி அறிவிப்பு

“ஒருவேளை கடவுள் நினைத்து சூரியகுமார் காயமடையும் சூழ்நிலை வந்தால் இந்திய அணியை வழி நடத்துவதற்கு நான் எப்போதும் தயாராக இருப்பேன்” என்று கூறினார். இருப்பினும் சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே சூரியகுமார் காயத்தை சந்தித்தாலும் கேப்டன்ஷிப் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு வருமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement