தனது துவக்க வீரர் இடத்தினை இளம் வீரருக்காக விட்டுக்கொடுத்த ரோஹித் சர்மா – 3 ஆவது போட்டியில் மாற்றம்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதி டி20 போட்டியானது கொல்கத்தா மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதி வருகின்றன. ஏற்கனவே இந்த தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

Pooran

- Advertisement -

இதன் காரணமாக இன்றைய போட்டியில் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 4 மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு இல்லாமல் காத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இன்று வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று விராட் கோலிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் இணைந்துள்ளார்.

மேலும் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இன்று இந்திய அணிக்காக ஆவேஷ் கான் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளர் சாஹலுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த கடைசி t20 போட்டியில் ரிஷப் பண்ட் ஓய்வு எடுத்து உள்ளதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். மேலும் அவருடன் ருதுராஜ் கெய்க்வாட்டே துவக்க வீரராக களமிறங்கி விளையாடினார்.

gaikwad

ஏனெனில் துவக்க வீரராக மட்டுமே விளையாடி பழக்கப்பட்ட கெய்க்வாட் வேறு எங்கும் இறங்க கூடாது என்பதற்காக டாசின் போதே ருதுராஜ் மற்றும் இஷான் கிஷன் தான் ஓபனிங் இறங்குவார்கள் என்று கூறிய கேப்டன் ரோகித் சர்மா தனது இடத்தை விட்டுக் கொடுத்து அவர்கள் இருவரையும் ஓபன் செய்ய வைத்துள்ளார். அதன்படி இந்த போட்டியில் தற்போது விளையாடிய கெய்க்வாட் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 8 பந்துகளை சந்தித்த நிலையில் ஒரு பவுண்டரி அடித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

பின்னர் மூன்றாவது இடத்தில் இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடித்து 25 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறியதால் தற்போது ரோகித் சர்மா 4-வது வீரராக களம் இறங்கி இஷான் கிஷனுடன் விளையாடி வருகிறார். மேலும் டாசுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில் : இந்த போட்டியிலும் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம்.

இதையும் படிங்க : நான் பி.சி.சி.ஐ யின் தலைவராக இருக்கும் வரை உனக்கு வாய்ப்பு இருக்கு – சீனியர் வீரருக்கு உறுதியளித்த கங்குலி

ஏனெனில் கடந்த போட்டியின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியிருந்தோம். அந்த வகையில் இன்றைய போட்டியிலும் அதே போன்று செயல்பட நினைக்கிறோம். எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கு தயாராக இந்திய வீரர்கள் உடல் அளவிலும், மன அளவிலும் தயாராக இருக்க வேண்டும் என்பதன் காரணமாகவே தற்போது வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement