நான் பி.சி.சி.ஐ யின் தலைவராக இருக்கும் வரை உனக்கு வாய்ப்பு இருக்கு – சீனியர் வீரருக்கு உறுதியளித்த கங்குலி

Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்று முடியும் வேளையில் அடுத்ததாக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ மூலம் வெளியாகியது. அதில் சீனியர் வீரர்களான ரஹானே, புஜாரா மற்றும் அனுபவ வீரர்களான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விரிதிமான் சஹா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியில் அனுபவ வீரராக நீண்டகாலமாக இருந்துவரும் விக்கெட் கீப்பர் சஹா இம்முறை இடம்பெறாதது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் இந்திய அணியில் இடம்பெறாமல் போனதை தொடர்ந்து பிரபல பத்திரிக்கையாளர் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக ஒரு மெசேஜை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பகிர்ந்த அந்த பதிவில் : வாட்ஸ்அப் மூலம் அந்த குறிப்பிட்ட பத்திரிகையாளர் சஹாவுக்கு சிலர் மெசேஜ்களை அனுப்பி உள்ளார். அதில் அவர் : இனி உங்களை நான் பேட்டி எடுக்க மாட்டேன். ஏனெனில் நீங்கள் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இல்லை என்று மிரட்டியுள்ளார்.

- Advertisement -

அதை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ள சஹா இந்திய அணிக்காக நான் பங்காற்றியதில் இறுதியாக நான் பெற்றது இதுதான் என்று அந்த ட்வீட்டை அப்படியே பிசிசிஐ தலைவரான கங்குலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது கூட அரை சதம் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சகா இப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் இதுபோன்ற சில மெசேஜ்கள் வருவது அவரை வருத்தமடைய செய்துள்ளது.

இதையும் படிங்க : அறிமுக போட்டியிலேயே சச்சின் மற்றும் ரோஹித்தை மிஞ்சி வரலாற்று சாதனை படைத்த – யாஷ் துள்

இந்நிலையில் சஹாவிற்கு ஆறுதலாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் : நான் இங்கு இருக்கும் வரை நீ அணியில் இருப்பாய் என்று அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றாலும் நிச்சயம் அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் அவர் இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement