அறிமுக போட்டியிலேயே சச்சின் மற்றும் ரோஹித்தை மிஞ்சி வரலாற்று சாதனை படைத்த – யாஷ் துள்

Dhull
- Advertisement -

இந்திய அணி இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றியது. இந்த உலகக்கோப்பை அணியை இளம் வீரரான யாஷ் துள் வழிநடத்தினார். அவரது தலைமையில் கோப்பையை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவித்தது மட்டுமின்றி பரிசு தொகையும் கிடைத்தது. அதேபோன்று குறிப்பிட்ட சில வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

dhull 1

- Advertisement -

அந்தவகையில் அண்டர் 19 அணி இந்த உலக கோப்பை தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த கேப்டன் யாஷ் துள் டெல்லி அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் டொமஸ்டிக் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்காக அறிமுகமாகிய அவர் தான் விளையாடி வரும் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். 133 பந்துகளைச் சந்தித்த நிலையில் அவர் தமிழ்நாடு அணிக்கு எதிராக இந்த சதத்தை விளாசியுள்ளார்.

dhull 2

கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கிய இந்த ரஞ்சி கோப்பை தொடரானது ஜூன் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இன்று துவங்கிய டெல்லி மற்றும் தமிழக அணிகளுக்கிடையேயான ரஞ்சிப் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய யாஷ் துள் 150 பந்துகளை சந்தித்த நிலையில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்சிலும் யாஷ் துள் சதமடித்து தனது அற்புதமான பார்மை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை ரஞ்சி கோப்பையில் யாரும் செய்யாத சாதனையாக ஒரு விடயத்தினை யாஷ் துள் இந்த சதத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார்.

இதையும் படிங்க : இலங்கை தொடரில் இந்த 2 இளம் வீரருக்கு கொடுக்காதது ஏன் – திலீப் வெங்சர்க்கார் கேள்வி

அந்த சாதனை யாதெனில் அறிமுக ரஞ்சிப் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் அறிமுகப் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் மட்டுமே சதம் விளாசிய சச்சின் மற்றும் ரோகித் ஆகியோரது சாதனைகளை முறியடித்து தற்போது தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement