இலங்கை தொடரில் இந்த 2 இளம் வீரருக்கு கொடுக்காதது ஏன் – திலீப் வெங்சர்க்கார் கேள்வி

Dilip
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் பிப்ரவரி 24, 26, 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தர்மசாலா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.

IND

- Advertisement -

அதன்பின் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை டெஸ்ட் தொடர் மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் துவங்க உள்ளது. இந்த சுற்றுப் பயணத்துக்கான டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய 2 இந்திய அணிகளையுமே பிசிசிஐ நேற்று அறிவித்தது.

புதிய இந்திய அணி:
அந்த அறிவிப்பில் இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக அனுபவ வீரர் ரோகித் சர்மாவை நியமித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணிகளின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தற்போது டெஸ்ட் போட்டிக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விரைவில் துவங்க உள்ள இலங்கை சுற்றுப்பயணத்திலிருந்து இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட உள்ளார்.

IND

அதேபோல் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு புதிய சகாப்தத்தில் காலடி எடுத்து வைக்கவுள்ளது இந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இலங்கை டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பிரியங் பஞ்சல், சௌரப் குமார் போன்ற புதுமுக இந்திய வீரர்களுக்கு முதல் முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பார்மின்றி தவித்து வரும் அஜின்க்யா ரகானே, புஜாரா போன்ற ஒரு சில மூத்த வீரர்கள் இந்த அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளார்கள்.

- Advertisement -

2 வீரர்களுக்கு வாய்ப்பில்லை:
இருப்பினும் இந்த தொடரில் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் இளம் வீரர்களான ருத்ராஜ் கைக்வாட் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர்களுக்கு இந்த இலங்கை டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்முறையும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

gaikwad

இந்நிலையில் இலங்கை டெஸ்ட் தொடரில் இந்த 2 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன் என இந்தியாவின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியை தேர்வு செய்யும் போது அவர்களைப் பற்றி தேர்வுக்குழுவினர் யோசிக்கவில்லை என்று நினைக்கிறேன். உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கைக்வாட் மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகியோரை இந்திய அணியில் தேர்வு செய்யாததற்கான நியாயமான காரணத்தை யாரும் விளக்க முடியாது.

- Advertisement -

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணியை பார்க்கும் போது ஒரு சில வீரர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் இந்திய அணியில் விளையாடும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்படவில்லை. மிகவும் கடினமாக உழைத்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் என்ற ஒரு நிலையை உருவாக்குங்கள்” என கூறியுள்ள அவர் தேர்வு குழுவினரை விளாசியுள்ளார்.

Sarfaraz-khan-2

எப்போது இடம் கிடைக்கும்:
அவர் கூறுவது போல மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்பராஸ் கான் கடந்த 2019/20 ரஞ்சி கோப்பை சீசனில் வெறும் 6 போட்டிகளில் 952 ரன்களை 154.66 என்ற மிரளவைக்கும் சராசரியில் அடித்து எதிரணிகளை மிரட்டினார். தற்போது துவங்கி நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் கூட சௌராஷ்டிரா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பட்டையை கிளப்பிய அவர் இரட்டை சதமடித்து 275 ரன்கள் விளாசி முரட்டுத்தனமான பார்மில் உள்ளார். இருப்பினும் அவருக்கு இந்திய அணியில் விளையாடுவதற்காக வாய்ப்பு இப்போதும் கிடைக்கவில்லை.

- Advertisement -

இவரை போலவே மற்றொரு இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களான ரஞ்சி கோப்பை, ஐபிஎல், விஜய் ஹசாரே கோப்பை போன்ற அனைத்து விதமான போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டு மலைபோல ரன்களை குவித்து வருகிறார். இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய வெள்ளைப்பந்து அணியில் அவர் தேர்வு செய்யப்பட்ட போதும் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க : அன்று அவமதிக்கப்பட்ட ரோஹித் சர்மா. இன்று தொட்டிருக்கும் உச்சம் பற்றி தெரியுமா? – விவரம் இதோ

இப்படி உள்ளூர் கிரிக்கெட்டில் தரமாக விளையாடி வரும் இந்த இருவருக்கும் வாய்ப்பு வழங்குவது பற்றி முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்க்கார் மேலும் பேசியது பின்வருமாறு. “ருதுராஜ் மற்றும் சர்ப்ராஸ் ஆகிய இருவருமே இந்திய அணியில் விளையாட தகுதியானவர்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் அவர்களை தேர்வு செய்யாமல் அவர்களின் திறமையை தேர்வு குழுவினர் வீணடிக்கிறார்கள்” என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement