அன்று அவமதிக்கப்பட்ட ரோஹித் சர்மா. இன்று தொட்டிருக்கும் உச்சம் பற்றி தெரியுமா? – விவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி லக்னோவில் துவங்க உள்ளது. அதன்பின் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

rohith

- Advertisement -

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஓய்வெடுத்துவிட்டு டெஸ்ட் தொடருக்கு திரும்புகிறார்கள். அதேபோல் நீண்ட காலமாக காயத்தில் தவிர்த்து வந்த ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

புதிய கேப்டன் ரோஹித் சர்மா:
முன்னதாக நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக அனுபவ வீரர் ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி திடீரென அந்த பதவியியை ராஜினாமா செய்தார். அதன் காரணமாக இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற மிகப்பெரிய கேள்வி நிலவி வந்த நிலையில் அப்பதவியில் தற்போது ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

rohith

இதை அடுத்து விரைவில் துவங்கவுள்ள இலங்கை டெஸ்ட் தொடர் முதல் இந்தியாவின் 35ஆவது டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்று செயல்பட உள்ளார். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருந்த அவர் தற்போது 3 வகையான இந்திய கிரிக்கெட்டுக்கும் முழுநேர கேப்டனாக செயல்பட உள்ளார்.

- Advertisement -

அன்று இடமில்லை:
கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாட துவங்கிய ரோகித் சர்மா வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க தடுமாறி வந்தார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த இவரை நீண்ட நாட்களாக பார்த்து வந்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி அவரின் திறமையை அறிந்து கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் முதல் முறையாக ஷிகர் தவானுடன் ஓப்பனிங் வீரராக களமிறக்கினார்.

rohith 1

அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய ரோகித் சர்மா ஓபனிங் பேட்ஸ்மேனாக எதிரணிகளை பந்தாடி பல சாதனைகளைப் படைத்து இந்தியாவிற்கு வெற்றிகளை தேடித்தர துவங்கினார். அதன் காரணமாக கடந்த 2013ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார் என்றாலும் அவரால் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.

- Advertisement -

இருப்பினும் 2013 முதல் 2018 வரையிலான காலகட்டங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து அவ்வப்போது இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற போதிலும் அதை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக “டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா சரிப்பட்டு வர மாட்டார்” என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. அதன் காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா புறக்கணிக்கப்பட்டார்.

Rohith

ரோஹித்தின் எழுச்சி:
இருப்பினும் அதற்கெல்லாம் அசராத ரோகித் சர்மா தொடர்ந்து வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு அதே இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பையில் 5 சதங்களை அடித்து உலக சாதனை படைத்தார். அந்த உலக சாதனையால் இந்திய தேர்வு குழுவினரின் கதவை மீண்டும் தட்டிய ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் விளையாடும் ஒரு வாய்ப்பை கடைசி முறையாக பெற்றார்.

- Advertisement -

அதற்கு முந்தைய காலகட்டங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த அவர் கடந்த 2019ஆம் ஆண்டு சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் தனக்கு மிகவும் பிடித்த ஓபனிங் இடத்தில் களமிறங்கினார். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய அந்த முதல் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்த அவர் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்து முத்திரை பதித்தார்.

Rohith

இன்று கேப்டன்:
அதன் காரணமாக “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார்” என்ற விமர்சனத்தை ரோகித் சர்மா துடைத்த போதிலும் இந்தியாவிற்கு வெளியே ஒரு டெஸ்ட் சதம் அடிக்கும் முடியாத காரணத்தால் “வெளிநாட்டு போட்டிகளுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார்” என்று மீண்டும் ஒரு அவப்பெயரை சந்தித்தார். அந்த வேளையில் கடந்த 2021 ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் அதன்பின் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நடந்த 5 போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்றார்.

அதில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4வது போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் ஒரு டெஸ்ட் சதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த எழுச்சியைக் கண்ட ரோகித் சர்மா கடந்த டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு முதல் முறையாக துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

rohith

உதித்த சூரியன்:
அந்த வேளையில் விராட் கோலி திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் தற்போதைய நிலைமையை சமாளிக்க ரோகித் சர்மாவை விட வேறு ஒரு சிறந்த கேப்டன் இல்லை என்பதை உணர்ந்துள்ள பிசிசிஐ அவரை புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவித்துள்ளது. மொத்தத்தில் “ஒரு காலத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இடமே இல்லை என்ற நிலையில் பரிதவித்து வந்த ரோகித் சர்மா இன்று அதே இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக அளவுக்கு உயர்ந்துள்ளது உண்மையாகவே அவரின் உழைப்பையும் திறமையையும் வளர்ச்சியையும் காட்டுகிறது”.

பொதுவாகவே தமக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்படும் போது ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் “சூரியன் நாளை மீண்டும் உதிக்கும்” என்ற வாசகத்தை புன்னகையுடன் பதிவிடுவார். ஆனால் அந்த வாசகத்தை பதிவிட்டதோடு விட்டுவிடாமல் அந்த இலக்கை எட்டுவதற்கு கடினமாக உழைத்து இன்று இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு பிரம்மாண்ட உச்சத்தை எட்டியுள்ளார்.

இதையும் படிங்க : இவரை பெஞ்சில் அமர வைப்பதில் எந்த நியாயமும் இல்லை, சிஎஸ்கே வீரருக்காக வரிந்து கட்டிய – வாசிம் ஜாபர்

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்திய கிரிக்கெட்டில் ரோகித் சர்மா எனும் உச்சத்தில் ஜொலிக்கும் சூரியனுக்கு இந்திய ரசிகர்களின் சார்பாக வாழ்த்துக்கள். மேலும் இந்த பொறுப்பில் அவர் சிறப்பாக செயல்பட்டு நீண்ட நாட்களாக கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத உலககோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஆசையாகும்.

Advertisement