IND vs IRE : அயர்லாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இடம்பிடித்த 2 சி.எஸ்.கே வீரர்கள் – ரசிகர்கள் மகிழ்ச்சி

IND-vs-IRE
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்த இரண்டு தொடர்களுக்கும் அடுத்து இந்திய அணியானது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை இன்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதில் எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் விளையாடவுள்ள சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

அதன் காரணமாக காயத்திலிருந்து மீண்ட பும்ரா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இரண்டு சிஎஸ்கே வீரர்கள் இடம் பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே அணியின் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் இடம் பெற்றதோடு சேர்த்து துணை கேப்டன் பதவியையும் பெற்றுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs WI : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாமின் மாபெரும் சாதனையை முறியடித்த – சுப்மன் கில்

அதேபோன்று இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக மிடில் ஆர்டரில் இறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு சிஎஸ்கே வீரர்கள் இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இடம் பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement