IND vs WI : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாமின் மாபெரும் சாதனையை முறியடித்த – சுப்மன் கில்

Gill-and-Babar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது ஆகஸ்ட் 1-ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரின் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடிய துவக்க வீரர் சுப்மன் கில் 34 ரன்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் மாபெரும் சாதனையை ஒன்றினை தகர்த்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அந்த வகையில் இந்திய அணிக்காக கடந்த 2019-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிய சுப்மன் கில் இதுவரை 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 1352 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதேவேளையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதல் 26 போட்டிகளின் போது அதிக ரன்கள் அடித்த வீரராக இதுவரை பாபர் அசாம் 1322 ரன்கள் உடன் முதலிடத்தில் இருந்து வந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs IRE : அயர்லாந்து அணிக்கெதிரான டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

இந்நிலையில் அதனை கடந்த போட்டியில் அடித்த 34 ரன்களுடன் சேர்த்து 1352 ரன்களை குவித்து சுப்மன் கில் பின்னுக்கு தள்ளியுள்ளார். அதோடு இந்த பட்டியலில் இவர்கள் இருவருக்கு அடுத்து ஜோனாதன் டிராட் 1303 ரன்கள், பக்கார் சமான் 1275 ரன்கள், ராசி வாண்டர் டுசைன் 1267 ரன்கள் என அடுத்தடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement