IND vs IRE : அயர்லாந்து அணிக்கெதிரான டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

IND-vs-IRE
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை (1-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது தற்போது அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த ஒருநாள் தொடருக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து நேரடியாக அயர்லாந்து பயணிக்கும் இந்திய அணியானது அங்கு நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் இன்று அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இளம் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே பேசப்பட்டு வந்தது போலவே சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடந்த பல மாதங்களாக இந்திய அணியில் விளையாடாமல் இருந்த பும்ரா இந்த தொடரில் கேப்டனாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகிறார்.

- Advertisement -

அவரை தவிர்த்து இந்த தொடரின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹார்டிக் பாண்டியா மற்றும் துவக்க வீரர் சுப்மன் கில் ஆகியோருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த அணியில் இடம் பிடித்துள்ள அனைவருமே ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் 15 பேர் கொண்ட முழு லிஸ்ட் இதோ :

இதையும் படிங்க : வீடியோ : தல தோனியின் அட்வைஸ் தான் ஹெல்ப் பண்ணுச்சு – உள்ளூர் தொடரில் ஃபினிஷிங் செய்த சிஎஸ்கே சிக்ஸர் துபே பேட்டி

1) ஜஸ்ப்ரீத் பும்ரா (கேப்டன்), 2) ருதுராஜ் கெய்க்வாட் (து.கேப்டன்), 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) திலக் வர்மா, 5) ரிங்கு சிங், 6) சஞ்சு சாம்சன், 7) ஜித்தேஷ் சர்மா, 8) ஷிவம் துபே, 9) வாஷிங்க்டன் சுந்தர், 10) ஷாபாஸ் அகமது, 11) ரவி பிஷ்னாய், 12) பிரசித் கிருஷ்ணா, 13) அர்ஷ்தீப் சிங், 14) முகேஷ் குமார், 15) அவேஷ் கான்.

Advertisement