RSA vs SL : இதைதான் நாங்க எதிர்பார்த்தோம். இலங்கையை வீழ்த்திய பின்னர் – தெ.ஆ கேப்டன் அளித்த பேட்டி

Temba-Bavuma
- Advertisement -

நடப்பு 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது (இன்று) அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும், தசும் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதின. அந்த வகையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக குவிண்டன் டி காக், வாண்டர் டுசைன் மற்றும் மார்க்ரம் ஆகியோர் சதமடித்து அசித்திருந்தனர்.

- Advertisement -

இலங்கை அணி சார்பாக தில்சன் மதுஷங்கா இரண்டு விக்கெட்டையும், பதிரானா, ரஜிதா, வெல்லாலகே தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியனர். பின்னர் 429 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் குவித்தது.

இலங்கை அணி சார்பாக குசால் மென்டிஸ் 76 ரன்களையும், சரித் அசலங்கா 79 ரன்களையும், தசுன் ஷானகா 68 ரன்களையும் குவித்தனர். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசி தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் எவ்வாறு விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோமோ அதே போன்று இந்த போட்டியில் விளையாடி உள்ளோம். இது ஒரு முழுமையான போட்டியாக எங்களுக்கு இருந்தது. இந்த போட்டியில் கிடைத்த வெற்றி எங்களுக்கு அடுத்த போட்டியிலும் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த போட்டியின் போது இரண்டாம் பாதியிலும் பந்து நன்றாக பேட்டுக்கு வந்தது.

இதையும் படிங்க : RSA vs SL : 428 ரன்கள் சேசிங்.. முழு மூச்சுடன் போராடிய இலங்கை.. பரபரப்பான போட்டியில் தெ.ஆ வென்றது எப்படி?

இலங்கை வீரர்கள் அதனை பயன்படுத்தி சிறப்பாக ஆடியதையும் நம்மால் பார்க்க முடிந்தது. இது போன்ற ஆடுகளங்களில் மைதானத்தின் தன்மையை கணித்து விளையாடும் பட்சத்தில் போட்டி சிறப்பாக இருக்கும். அடுத்த போட்டி நடைபெற இருக்கும் மைதானத்தில் பெரிய அளவில் மாறுதல் இருக்காது என்று நினைக்கிறேன். குவிண்டன் டி காக் தற்போது நலமுடன் உள்ளார். அவர் இரண்டாம் பாதியில் பீல்டிங் செய்ய வரவில்லை என்றாலும் நிச்சயம் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவார் என தெம்பா பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement