RSA vs SL : 429 ரன்கள் சேசிங்.. முழு மூச்சுடன் போராடிய இலங்கை.. பரபரப்பான போட்டியில் தெ.ஆ வென்றது எப்படி?

RSA vs SL 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 7ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 4வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா ஆரம்பத்திலேயே 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த குவிண்டன் டீ காக் மற்றும் ராசி வேன் டெர் டுஷன் ஆகியோர் இலங்கை பவுலர்களை அடித்து நொறுக்கி 2வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். அதில் டீ காக் சதமடித்து 12 பவுண்டரி 3 சிக்சருடன் 100 (84) ரன்கள் குவித்து அவுட்டான நிலையில் மறுபடியும் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டிய டுஷன் 13 பவுண்டரி 2 சிக்சருடன் 108 (110) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

போராட்ட வெற்றி:
அந்த நிலைமையில் வந்த ஹென்றிச் க்ளாஸென் 32 (20) ரன்களில் அவுட்டானாலும் அப்புறம் மீண்டும் இலங்கை பவளர்களை பந்தாடிய ஐடன் மார்க்ரம் 14 பவுண்டரி 3 சிக்சருடன் அதிவேக சதமடித்த வீரராக சாதனை படைத்து 106 (54) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் டேவிட் மில்லர் 39* (21) ரன்கள் எடுக்க 50 ஓவர்களில் 428/5 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக உலக சாதனை படைத்தது.

சுமாராக பந்து வீசிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்காய் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 429 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததை போல மறுபுறம் தடுமாறிய குசால் பெரேராவும் 7 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் அடுத்ததாக வந்த குஷால் மெண்டிஸ் சரவெடியாக விளையாடி 4 பவுண்டரி 8 சிக்சருடன் 76 (42) ரன்கள் விளாசி தேவையான அடித்தளமிட்டு சென்றார்.

- Advertisement -

இருப்பினும் மிடில் ஆர்டரில் சமரவிக்ரமா 23 (19) டீ சில்வா 11 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். ஆனாலும் எதிர்புறம் மனம் தளராத அசலங்கா அடுத்து வந்த கேப்டன்ஸ் சானக்காவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அந்த வகையில் 6வது விக்கெட்க்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் அசலங்கா 8 பவுண்டரி 4 சிக்சருடன் 79 (65) ரன்களில் அவுட்டானார்.

இதையும் படிங்க: IND vs AUS : சுப்மன் கில் விளையாடுறத விட தற்போதைக்கு எனக்கு அதுதான் முக்கியம் – ரோஹித் சர்மா பெருந்தன்மை

அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் போராடிய சனாக்காவும் 68 (62) ரன்களில் அவுட்டாக கடைசியில் கௌசன் ரஜிதா 33 (31) ரன்கள் எடுத்த போதிலும் 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை 326 ரன்கள் மட்டுமே எடுத்து முடிந்தளவுக்கு போராடி தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஓவருக்கு 8க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்க வேண்டுமென்ற அழுத்தத்தில் இலங்கை போராடி தோற்றது. மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்த தென்னாப்பிரிக்கா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஜெரால்டு கோட்சி 3 விக்கெட்டுகளையும் ரபாடா, கேசவ் மகாராஜ், மார்கோ யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்து தன்னுடைய பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளனர்.

Advertisement