IND vs AUS : சுப்மன் கில் விளையாடுறத விட தற்போதைக்கு எனக்கு அதுதான் முக்கியம் – ரோஹித் சர்மா பெருந்தன்மை

Rohit-and-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2023-ஆம் ஆண்டிற்க்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டி அக்டோபர் 8-ஆம் தேதி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. இந்த போட்டிக்காக ஏற்கனவே சென்னை வந்தடைந்த இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதோடு ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் அந்த போட்டியில் வெற்றி பெற்று எந்த அணி வெற்றிகரமாக இந்த உலகக் கோப்பை தொடரை துவங்கப் போகிறது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இவ்வேளையில் இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க வீரரான சுப்மன் கில் இந்த உலகக் கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த முதல் போட்டியிலேயே அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் சென்னை வந்தடைந்த இந்திய வீரர்கள் பயிற்சி ஈடுபட்ட போது சுப்மன் கில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் அவரால் பயிற்சியில் ஈடுபட முடியாமல் போனது. இந்நிலையில் அவரது இடம் குறித்து பேட்டி அளித்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய போட்டிகளில் தங்கம் என்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்கள். நமது நாட்டிற்கே மிகப்பெரிய தருணம் இது என்று கூறிய பின்னர் கில் குறித்த கேள்விக்கும் பதிலளித்தார். இது குறித்து அவர் கூறுகையில் : சுப்மன் கில் தற்போதைக்கு 100% உடற் தகுதியுடன் இல்லை அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். மற்றபடி அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

- Advertisement -

அவர் குணமடைவதற்கான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அவர் ஆஸ்திரேலியா போட்டியிலிருந்து இதுவரை விலக்கப்படவில்லை என்றாலும் அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. ஒரு கேப்டன் என்பதை தாண்டி அடிப்படையில் நான் ஒரு நல்ல மனிதன். தற்போதைக்கு கில் விளையாடுவாரா? விளையாட மாட்டாரா? என்பது குறித்து எதையும் கூற விரும்பவில்லை. தற்போதைக்கு அவரது உடல்நிலை சரியாக வேண்டும் என்பதை மட்டுமே நான் நினைக்கிறேன்.

இதையும் படிங்க : CWC 2023 : 48 வருடங்கள்.. 450 போட்டிகள்.. வேறு யாருமே செய்யாத புதிய தனித்துவ உலக சாதனை படைத்த தெ.ஆ

சுப்மன் கில் ஒரு பிட்டான வீரர் அதுவும் இன்றி அவர் ஒரு இளம் வீரர் நிச்சயம் இந்த பாதிப்பில் இருந்து அவர் விரைவில் குணமடைந்து வருவார் என ரோகித் சர்மா பெருந்தன்மையுடன் கூறியது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த கருத்தின் மூலம் நாளைய போட்டியில் சுப்மன் கில் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement