- Advertisement -
உலக கிரிக்கெட்

330 ரன்ஸ்.. லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவை முந்திய தெ.ஆ சாதனை.. இங்கிலாந்தை நொறுக்கி அபாரம்

இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 132 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 2வது போட்டி செப்டம்பர் நான்காம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு 73 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ரியான் ரிக்கல்டன் 35 (33) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் பவுமா 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அபாரம்:

அடுத்த சில ஓவரில் மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த மற்றொரு துவக்க வீரர் ஐடன் மார்க்ரம் 49 (64) ரன்களில் அவுட்டாகி அரை சதத்தை நழுவ விட்டு ஏமாற்றத்துடன் சென்றார். அடுத்ததாக மேத்தியூ பிரீட்ஸ்க் – ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். மிடில் ஓவர்களில் இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய அந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தென்னாப்பிரிக்காவை வலுப்படுத்தியது.

அதில் அதிரடியான அரை சதத்தை அடித்த மேத்யூ 7 பவுண்டரி 3 சிக்சருடன் 85 (77) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய ஸ்டப்ஸ் தமது பங்கிற்கு அரை சதத்தை அடித்து 58 (62) ரன்னில் ரன் அவுட்டானார். லோயர் ஆர்டரில் வந்த தேவால்ட் ப்ரேவிஸ் பட்டாசாக விளையாடி 3 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (20) ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

சாதனை ஸ்கோர்:

இறுதியில் கோர்பின் போஸ் 32* (29) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் தென்னாபிரிக்கா 330/8 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக கிரிக்கெட்டின் தாயகம் என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வெளிநாட்டு அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன் 2002ஆம் ஆண்டு இம்மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 326/8 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: அடுத்த 10 வருஷத்துக்கு ரோஹித் சர்மா சர்வதேச போட்டிகளில் ஆடனும்.. விருப்பத்தை தெரிவித்து வாழ்த்திய – கலீல் அகமது

குறிப்பாக 2002 நாட்வெஸ்ட் முத்தரப்பு கோப்பையின் இறுதிப்போட்டியில் சௌரவ் கங்குலி தலைமையிலான இந்தியா 326/8 ரன்களை அடித்து இங்கிலாந்து தோற்கடித்துக் கோப்பையை வென்றது. அன்றைய நாளில் இந்தியா பதிவு செய்த ஸ்கோரை தற்போது உடைத்துள்ள தென்னாபிரிக்கா புதிய சாதனைப் படைத்துள்ளது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -