இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்ற அவர் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன் காரணமாக இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாட இருக்கிறார்.
ரோஹித் சர்மா அடுத்த 10 வருஷம் விளையாடனும் : கலீல் அகமது கருத்து
அதிலும் குறிப்பாக எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரோடு அவர் ஒருநாள் வடிவத்தில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்பதனால் தற்போது தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். இருந்தாலும் அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதினால் அவர் இந்திய அணியில் நீடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனாலும் ரோகித் சர்மாவை பொறுத்தவரை அடுத்த 2027 உலகக் கோப்பை வரை தொடர்ந்து விளையாட வேண்டும் என்று பலரும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரோகித் சர்மா அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது தனது விருப்பத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னுடைய கிரிக்கெட் கரியர் என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகவே இருந்தது. 2018-19 இல் நான் இந்திய அணிக்காக அறிமுகமாகும் போது ரோகித் சர்மா தான் கேப்டனாக இருந்தார். ஒரு ஜூனியர் வீரராக அணிக்குள் இணைந்த என்னை அவர் அவ்வளவு பாதுகாப்பாக உணர வைத்தார்.
அவர் கொடுத்த ஊக்கமே என்னை சிறப்பாக செயல்பட வைத்தது. இருந்தாலும் இந்திய அணிக்காக ஆடிய ஓராண்டுக்கு பிறகு காயம் ஏற்பட்டதால் என்னால் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது. என்னைப் போன்ற பல்வேறு இளம் வீரர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடரில் நிச்சயம் இவர் இந்திய பிளேயிங் லெவனில் விளையாடனும் – மதன் லால் கருத்து
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் நன்றாக இருக்கவும், இளம் வீரர்கள் தங்களது திறன்களை வளர்க்கவும் ரோஹித் சர்மா போன்ற ஒரு வீரர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கலீல் அகமது கூறியது குறிப்பிடத்தக்கது.



