இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்று விளையாடயிருக்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை 2026 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்த தொடரானது 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற உள்ளன.
இந்திய அணியன் பிளேயிங் லெவனில் அவர் விளையாடனும் : மதன் லால்
இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது முதலாவது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக துபாய் செல்லும் இந்திய அணி அங்குள்ள ஐ.சி.சி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிகிறது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த தொடர் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் ஆசிய கோப்பை தொடரின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் விளையாடுவது முக்கியம் என முன்னாள் வீரரான மதன் லால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
இம்முறை ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி மிகவும் வலுவான அணியாகவே உள்ளது. ஆனாலும் மற்ற அணிகளின் செயல்பாடு பொறுத்தே நமது அணி கோப்பையை வெல்வது குறித்து நாம் முடிவு செய்ய முடியும். இந்தமுறை ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளும் கணிக்க முடியாத அணிகளாக இருக்கின்றன.
எனவே நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். என்னை பொறுத்தவரை ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் விளையாட வேண்டியது அவசியம். ஏனெனில் குல்தீப் யாதவின் தனித்துவமான பந்துவீச்சு ஸ்டைலை எதிர்கொள்வது மற்ற அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும்.
இதையும் படிங்க : அவர் எந்தவொரு அணிக்கும் சொத்துதான்.. முகமது சிராஜை பாராட்டிய பேசிய ஏ.பி.டி – விவரம் இதோ
அவரை எதிர்த்து எந்த அணி வீரர்களுமே ரன் குவிப்பது கடினம். அதனால் அவரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். அதேபோன்று துபாயில் விளையாடும் போது இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும் என மதன்லால் கூறியது குறிப்பிடத்தக்கது.



