தெறிக்க விட்ட அரஷ்தீப், ஆவேஷ் கான்.. தெ.ஆ அணியை 116க்கு சுருட்டிய இந்தியா.. 2018 சாதனையை உடைத்து புதிய சாதனை

IND vs RSA Arshdeep Avesh Khan
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டி20 கிரிக்கெட் தொடரில் 1 – 1 (3) என்ற கணக்கில் சமன் செய்த இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது டிசம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஜோஹன்ஸ்பர்க் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு முதல் ஓவரிலேயே ரீசா ஹென்றிக்ஸை 0 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கிய அர்ஷிதீப் சிங் அடுத்ததாக வந்த வேன் டெர் டுஷனை டக் அவுட்டாக்கி மிரட்டலை கொடுத்தார்.

- Advertisement -

மிரட்டிய இந்தியா:
அதனால் 3/2 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற தென்னாப்பிரிக்காவை காப்பாற்ற முயற்சித்த இளம் வீரர் டானி டீ ஜோர்சியையும் 28 (22) ரன்களில் காலி செய்த அர்ஷிதீப் அடுத்ததாக வந்த அதிரடி வீரர் ஹென்றிச் க்ளாசெனை 6 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கி தெறிக்க விட்டார். போதாகுறைக்கு அடுத்த ஓவரிலேயே கேப்டன் ஐடன் மார்க்ரமை 12 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய ஆவேஸ் கான் அடுத்ததாக வந்த வியன் முல்டரை டக் அவுட்டாக்கி அதற்கடுத்த சில ஓவரில் டேவிட் மில்லரையும் 2 ரன்களில் பெவிலியன் அனுப்பினார்.

அதன் காரணமாக 58/7 என்ற மெகா வீழ்ச்சியை சந்தித்த தென்னாப்பிரிக்காவுக்கு கேசவ் மகாராஜ் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் எதிர்ப்புறம் போராடிய ஆண்டிலோ பெலுக்வயோ அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் 27.3 ஓவரிலேயே தென்னாப்பிரிக்காவை 116 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக அரஷ்தீப் சிங் 5 விக்கெட்களையும் ஆவேஸ் கான் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

இதன் வாயிலாக ஒருநாள் போட்டிகளில் வலுவான தென்னாபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் மிகவும் குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2018ஆம் ஆண்டு செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெறும் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானேதே இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா பதிவு செய்த முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும்.

இதையும் படிங்க: ஆஸியை சாய்க்க எல்லாரும் இந்தியாவாக முடியுமா? பாகிஸ்தான் தோல்வியால் முதலிடத்துக்கு முன்னேற்றம்

இது மட்டுமல்லாமல் இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடிய ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி பதிவு செய்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். அந்த வகையில் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடிய இந்தியா அடுத்ததாக 117 ரன்களை சேசிங் செய்து இப்போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

Advertisement