ஆஸியை சாய்க்க எல்லாரும் இந்தியாவாக முடியுமா? பாகிஸ்தான் தோல்வியால் முதலிடத்துக்கு முன்னேற்றம்

PAK vs AUS vs IND
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. பெர்த் நகரில் டிசம்பர் 14ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி 478 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் சதமடித்து 164, மிட்சேல் மார்ஷ் 90 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 6 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக இமாம்-உல்-ஹக் 62 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

இந்தியா முதலிடம்:
அதன் பின் 216 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா 90, மிட்சேல் மார்ஷ் 63* ரன்கள் எடுத்த உதவியுடன் 233/5 ரன்களில் 2வது இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. இறுதியில் 450 என்ற மெகா இலக்கை துரத்திய பாகிஸ்தான் முன்பை விட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சவுத் சாக்கில் 24 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதனால் கடைசியாக 1995ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் சேர்த்து கடந்த 28 வருடங்களில் தொடர்ந்து 15வது முறையாக தோல்வியை சந்தித்தது. மறுபுறம் தங்களுடைய சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் ஆஸ்திரேலியா கடைசி 35 டெஸ்ட் போட்டிகளில் 26 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 5 போட்டிகள் டிராவில்

- Advertisement -

முடிந்தன. ஆனால் அந்த 4 தோல்விகளும் இந்தியாவுக்கு எதிராக வந்ததாகும். ஆம் கடந்த 2018/19 சீசனில் விராட் கோலி தலைமையில் அட்டகாசமாக விளையாடிய 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய அணியாக மாபெரும் வரலாறு படைத்தது. அதை தொடர்ந்து 2020/21 சீசனில் 36க்கு ஆல் அவுட்டாகி மோசமான துவக்கத்தை பெற்ற பின்பும் ரகானே தலைமையில் இளம் வீரர்களுடன் கொதித்தெழுந்த இந்தியா காபா கோட்டையை தகர்த்து 2 – 1 (4) கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலியாவில்லை வென்று சரித்திரம் படைத்தது.

இதையும் படிங்க: 86க்கு ஆல் அவுட்.. 28 வருடமாக செஃல்ப் எடுக்காமல் தொடரும் பாகிஸ்தான் சோகம்.. ஆஸி சாதனை வெற்றி

அந்த வகையில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க அனைத்து ஆசிய அணிகளாலும் இந்தியாவாகி விட முடியாது என்று இந்திய ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் தலை நிமிர்ந்து பேசி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலியாவின் வெற்றியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் 66.67% புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே 66.67% புள்ளிகளை கொண்டிருந்தாலும் 3இல் 1 தோல்வியை பதிவு செய்ததால் பாகிஸ்தான் 2வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா 41.67% புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement