தோத்ததை கூட ஏத்துக்கலாம். ஆனா இதை ஏத்துக்க முடியாது. தெ.ஆ அணி செய்த தவறை – சுட்டிக்காட்டிய நிபுணர்கள்

NED-vs-RSA
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நேற்று தர்மசாலா நகரில் நடைபெற்ற நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டியானது பரபரப்புக்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தியது.

இந்த உலகக் கோப்பை தொடர் துவங்கியதில் இருந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தென்னாப்பிரிக்க அணி தாங்கள் எதிர்கொண்ட முதல் இரண்டு போட்டியிலும் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளையும் தெ.ஆ அணி அசரடித்த வேளையில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்யவே மழை காரணமாக போட்டி 43 ஓவர்கள் வரை குறைக்கப்பட்டதால் நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த வேளையில் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. இந்த உலககோப்பை தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகளே பலமான அணிகள் என்று பலரும் பேசப்பட்டு வந்த வேளையில் கொஞ்சமும் குறைவின்றி தென் ஆப்பிரிக்க அணியானது இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே தங்களது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் திகைக்க வைத்தது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர்கள் எளிதாக வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம் வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நெதர்லாந்து அணியிடம் 38 வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்னாபிரிக்க அணி பெற்ற இந்த தோல்விக்கு அவர்களது மெத்தனமான பந்துவீச்சே காரணம் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில் ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த வேளையில் நிச்சயம் 180 ரன்கள் கூட தொடாது என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மிகவும் மெத்தனமாக பந்துவீசிய தென்னாப்பிரிக்க அணி அவர்களை 43 ஓவர்கள் முழுவதுமாக பேட்டிங் செய்ய வைத்தது மட்டும் இன்றி 245 ரன்களையும் குவிக்க வைத்தது. அதோடு இந்த இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 31 உதிரிகளை வழங்கியது.

இதையும் படிங்க : லெஜெண்ட் கபில் தேவின் 36 வருட உ.கோ சாதனையை உடைத்த நெதர்லாந்து கேப்டன்.. புதிய உலக சாதனை

அதில் 21 உதிரிகள் வொயிடு வழியாகவும், 9 உதிரிகள் லெக் பைஸ் வழியாகவும், 1 உதிரி நோபால் வழியாகவும் கசிந்தது. ஆனால் நெதர்லாந்து அணி இந்த இன்னிங்சில் 42.5 ஓவர்களில் 8 உதிரிகளை மட்டுமே வழங்கினர். இப்படி சிறிய அணி என்று நினைத்து தென்னாப்பிரிக்க அணி காட்டிய மெத்தனமே போக்கே இந்த தோல்விக்கு காரணம் என தென்னாப்பிரிக்க அணியை கிரிக்கெட் நிபுணர்கள் சுட்டிக்காட்டி விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement