
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப்பட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். அதேவேளையில் குரூப் பி பிரிவில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி மட்டும் தான் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருந்தது.
இதன் காரணமாக இரண்டாவது அணியாக எந்த அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வேளையில் ஏற்கனவே இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால் அவர்கள் அரையிறுதிக்கு முன்னேற முடியாத சூழல் ஏற்பட்டது.
அதே வேளையில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு இருந்தது. ஆனாலும் சில நிபந்தனைகளுடன் இன்று நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான இடையான போட்டியின் முதல் பாதிலேயே தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.
அதாவது இன்று கராச்சி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியை 200 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் என்ற நிலை இருந்த வேளையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியை தென்னாப்பிரிக்க அணி 179 ரல்களுக்கு சுருட்டியது.
இதன் காரணமாக எவ்வித சிரமமும் இன்றி தென்னாப் பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. தற்போது 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்துள்ள வேளையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதையும் படிங்க : ரஞ்சி தொடரில் இறுதிப்போட்டியில் சதமடித்த பின்னர் கருண் நாயர் கொடுத்த சிக்னல் – எதற்கு யாருக்கு தெரியுமா?
இந்த இரண்டு அணிகளில் இந்திய அணி எந்த அணியுடன் மோதும் என்பது நாளை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2-ஆம் தேதி துபாயில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.