ரஞ்சி தொடரில் இறுதிப்போட்டியில் சதமடித்த பின்னர் கருண் நாயர் கொடுத்த சிக்னல் – எதற்கு யாருக்கு தெரியுமா?

Karun
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராஃபியானது நிறைவடையும் தருவாயில் உள்ளது. பல்வேறு மாநில அணிகள் பங்கேற்ற இந்த ரஞ்சி தொடரின் இறுதி போட்டியில் விளையாட விதர்பா மற்றும் கேரளா ஆகிய அணிகள் தகுதி பெற்றன. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மாபெரும் இறுதிப்போட்டி நாக்பூர் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி துவங்கியது.

சதமடித்த பின்னர் கருண் நாயர் கொடுத்த சிக்னல் :

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கேரளா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய விதர்பா அணி தங்களது முதல் இன்னிங்சில் 379 ரன்கள் குவித்தது. விதர்பா அணி சார்பாக டேனிஷ் மலேவர் 153 ரன்களையும், கருண் நாயர் 86 ரன்களையும் குவித்தனர். பின்னர் கேரளா அணி தங்களது முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் விதர்பா அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள விதர்பா அணி நாளை கடைசி நாளில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி டிராவில் முடிவடைந்தாலும் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்ததன் காரணமாக விதர்பா அணியே வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் 86 ரன்களை குவித்த கருண் நாயர் இரண்டாவது இன்னிங்ஸிலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 132 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். இந்நிலையில் இந்த ரஞ்சி தொடரின் இறுதி போட்டியில் சதம் அடித்த பிறகு கருண் நாயர் சதத்தை கொண்டாடினார்.

- Advertisement -

பின்னர் ஒன்பது விரல்களை ஓய்வறையை நோக்கி காண்பித்தார். இதற்கு பின்னால் ஒரு பெரிய காரணம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சீசனில் மட்டும் விஜய் ஹசாரே தொடரில் 5 சதம் மற்றும் ரஞ்சி கோப்பையில் நான்கு சதம் என ஒன்பது சதங்களை அடித்திருக்கிறேன் என்பதை தேர்வுக் குழுவினருக்கு சிக்னல் கொடுக்கும் வகையிலே அவர் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா மட்டும் பாகிஸ்தான் போயிருந்தா இதுதான் நடந்திருக்கும் – ராஃபின் உத்தப்பா பேட்டி

ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த அவர் கடந்த பல ஆண்டுகளாகவே தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் இப்போது சமீப காலமாகவே அவர் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது காம்பேக்கிற்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement