இங்கிலாந்து மண்ணில் 2025 உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் என்ற ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் டி20 தொடர் நடைபெறுகிறது. அத்தொடரின் 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. ஜூலை 19ஆம் தேதி பர்மிங்காம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா சாம்பியன்ஸ் கேப்டன் ஏபி டீ வில்லியர்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
மழையால் தலா 11 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 80/5 ரன்கள் குவித்தது. கேப்டன் கிறிஸ் கெய்ல் 2, ட்வயன் ஸ்மிட்ஜ் 7, பொல்லார்ட் 0, ட்வயன் ப்ராவோ 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதிகபட்சமாக சிமென்ஸ் 28 (21), சாட்விக் வால்டன் 27* (21) ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
சோக் செய்த தென் ஆப்பிரிக்கா:
தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆரோன் பஃங்சோ 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணிக்கும் ரிச்சர்ட் லெவி 6, ஹாசிம் அம்லா 15, கேப்டன் டீ வில்லியர்ஸ் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் அசத்திய சாரல் எர்வி 27 (18) ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அதே போல ஜேபி டுமினி அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஃபிடல் எட்வர்ட்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் டபுள் ரன் எடுத்த டுமினி அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து 3வது பந்தில் சிங்கிள் எடுத்தார். அதனால் 3 பந்துகளில் தென்னாபிரிக்காவுக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ்:
ஆனால் 4வது பந்தில் மறுபுறம் தடுமாறிய ஜேஜே ஸ்மட்ஸ் 4 ரன்னில் ரன் அவுட்டாக அடுத்து வந்த வேன் விக்கும் ரன் அவுட்டானார். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது வேன் பர்னல் சிங்கிள் மட்டுமே எடுத்தார். அதனால் ஜேபி டுமினி 25* (12) ரன்கள் எடுத்தும் சோக் செய்த தென்னாப்பிரிக்கா 11 ஓவரில் 80/6 ரன்களை மட்டுமே எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது.
இதையும் படிங்க: அடுத்த 10 நாளைக்கு அர்ஷ்தீப் சிங் விளையாட முடியாது.. மாற்று வீரராக இந்திய அணியில் இடம்பிடித்த – சி.எஸ்.கே பவுலர்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக எட்வர்ட்ஸ், செல்டன் காட்ரெல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இறுதியில் வெற்றியாளரைத் தீர்மானிக்க 2007 டி20 உலகக் கோப்பை இந்தியா – பாகிஸ்தான் போட்டியைப் போல பவுல் அவுட் விதிமுறை கடை பிடிக்கப்பட்டது. அதில் முதல் 3 பந்துகளை தவற விட்ட தென்னாப்பிரிக்க பவுலர்கள் கடைசி 2 வாய்ப்பில் ஸ்டம்பை சரியாக அடித்தார்கள். மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் முதல் 4 பந்துகளையும் தவற விட்டு சொதப்பியதால் தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது.



