அடுத்த 10 நாளைக்கு அர்ஷ்தீப் சிங் விளையாட முடியாது.. மாற்று வீரராக இந்திய அணியில் இடம்பிடித்த – சி.எஸ்.கே பவுலர்

Arshdeep and AK
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது போட்டி எதிர்வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்க இருக்கிறது.

அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக இந்திய அணியில் இணைந்த சி.எஸ்.கே பவுலர் :

இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளதால் நான்காவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்க உள்ளது.

- Advertisement -

ஏனெனில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து தொடரினை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் வலைப்பயிற்சியின்போது ஏற்பட்ட வெட்டு காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் அவரது காயம் முழுவதுமாக குணமடைய குறைந்தது 10 நாட்களாகும் என மருத்துவ அறிக்கை கூறுகிறது. இதன் காரணமாக நான்காவது போட்டியில் அவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்காது என்ற தகவலும் வெளியாகியது. இப்படி அர்ஷ்தீப் சிங் காயமடைந்துயுள்ள வேளையில் ஆகாஷ் தீப்புக்கும் இடுப்பு பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக அவரும் எதிர்வரும் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அன்சுல் கம்போஜ் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : பும்ரா விளையாடி தான் ஆகனும் போலயே.. 2 இந்திய பவுலர்கர்களுக்கு ஏற்பட்டுள்ள காயம் – வெளியான தகவல்

அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருந்த அவர் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி ஹரியானா அணிக்காக 24 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement