இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள வேளையில் இந்த தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மேலும் 2 வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயம் : வெளியான தகவல்
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது மான்செஸ்டர் நகரில் எதிர்வரும் ஜூலை 23-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.
ஏனெனில் ஏற்கனவே இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பணிச்சுமை காரணமாக பும்ரா இந்த தொடரில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா கடைசி இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுவார்.
ஆனால் ஏற்கனவே இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் பின்தங்கியுள்ள வேளையில் நான்காவது போட்டியில் கட்டாயம் பும்ரா விளையாடியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த தொடரில் பங்கேற்றுள்ள மேலும் இரண்டு இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் பும்ரா நான்காவது போட்டியில் விளையாடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அந்தவகையில் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் அர்ஷ்தீப் சிங் வலைப்பயிற்சியில் பந்துவீச்சில் ஈடுபட்டபோது கையில் வெட்டு காயம் ஏற்பட்டு காயமடைந்தார் என்ற தகவல் வெளியாகியது. இதன் காரணமாக அவர் நான்காவது போட்டியில் அறிமுக வாய்ப்பினை பெறுவது சந்தேகம் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க : டாப் ரன்ஸ், விக்கெட்ஸ், சதமடிச்சும் இந்தியா தோல்வி.. இதுக்கு தான் கோலி வேணுங்கிறது.. ஸ்டீவ் ஹார்மிசன்
இந்நிலையில் மேலும் ஒரு வீரராக இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவரும் நான்காவது போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. இப்படி இரண்டு பவுலர்கள்கள் காயமடைந்துள்ளதால் நான்காவது போட்டியில் பும்ரா விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



