போராடிய சுதர்சன், ராகுல்.. அசத்திய டோனி.. திருப்பி அடித்த தெ.ஆ.. இந்தியா தோற்றது எப்படி?

IND vs RSA 2nd ODI
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக முதலில் நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலையும் பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி டிசம்பர் 19ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்றது.

அதில் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ருதுராஜை 4 ரன்களில் அவுட்டாக்கிய பர்கர் அடுத்ததாக வந்து நிதானமாக விளையாட முயற்சித்த திலக் வர்மாவையும் 10 ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

இந்தியா தோல்வி:
அதனால் 46/2 என தடுமாறிய இந்தியாவுக்கு மறுபுறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் அடுத்து வந்த கேப்டன் ராகுலுடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீண்டும் அரை சதமடித்த போது 62 (83) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க மறுபுறம் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ராகுல் அரை சதம் கடந்து 56 ரன்களில் அவுட்டானார்.

அப்போது வந்த ரிங்கு சிங் அறிமுக போட்டியில் 17 ரன்களில் அவுட்டாக அக்சர் படேல் போன்ற அடுத்து வந்த வீரர்களும் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர் 3 விக்கெட்டுகளை சாய்ந்தார். அதைத்தொடர்ந்து 212 என்ற சுலபமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ரீசா ஹென்றிக்ஸ் – டோனி டீ ஜோர்சி ஆகியோர் ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

அந்த வகையில் 28 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று இந்திய பவுலர்களுக்கு பெரிய சவாலை கொடுத்து 130 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் ஹென்றிக்ஸ் 52 ரன்கள் குவித்து அர்ஷிதீப் வேகத்தில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோர்சி தம்முடைய முதல் சதமடித்து 119* (122) ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க: அவரோட சேர்ந்து விளையாடபோவதை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு – சி.எஸ்.கே அணிக்காக தேர்வான ரச்சின் ரவீந்திரா

அவருடன் வேன் டெர் டுஷன் 36 ரன்கள் எடுத்து ரிங்கு சிங் சுழலில் சிக்கினாலும் 42.3 ஓவர்களிலேயே ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அவ்வளவு எளிதாக வீழ்ந்து விட மாட்டோம் என்பதை காண்பித்துள்ளது. மறுபுறம் பவுலர்கள் போராட முடியாத அளவுக்கு சாய் சுதர்சன் மற்றும் ராகுல் ஆகியோரை தவிர்த்து இதர வீரர்கள் பேட்டிங்கில் தேவையான ரன்கள் எடுக்க தவறியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Advertisement