210 ஸ்ட்ரைக் ரேட்.. 88 ரன்ஸ்.. மிரட்டல் கேட்ச்.. இந்தியாவை சூப்பர்மேனாக வீழ்த்திய ஏபிடி.. வயதானாலும் மாறாத ஸ்டைல்

Ind vs RSA 2
- Advertisement -

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நார்த்தம்டன் நகரில் ஜூலை 22ஆம் தேதி 6வது லீக் போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிக்கு துவக்க வீரர்கள் ஹாசிம் அம்லா 22 (19), ரூடோல்ப் 24 (20) ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இருப்பினும் கேப்டன் ஏபி டீ வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடினார். எதிர்ப்புறம் தடுமாறிய சாரல் ஏர்வி 15, ஜேபி டுமினி 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

ஏபிடி அபாரம்:

இந்தப் பக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டீ வில்லியர்ஸ் அரை சதத்தை அடித்தார். மறுபுறம் வந்த வேன் பர்னல் அதிரடியாக விளையாட முயற்சித்து 11 (6) ரன்னில் அவுட்டானார். அதே போல ஜேஜே ஸ்மெட்ஸ் அதிரடியாக 30 (17) ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியில் வேன் விக் 18* (5) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.

மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அட்டகாசமாக விளையாடிய டீ வில்லியர்ஸ் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 63* (30) ரன்கள் 210 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அதிரடி ஸ்டைல் மாறவில்லை என்பதை நிரூபித்தார். சுமாராக பவுலிங் செய்த இந்தியாவுக்கு அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா, யூசுப் பதான் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா 2 (13), ஷிகர் தவான் 1 (4), சுரேஷ் ரெய்னா 16 (11), அம்பத்தி ராயுடு 0 (2), யூசுப் பதான் 5 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

சூப்பர்மேன் கேட்ச்:

குறிப்பாக இம்ரான் தஹீர் சுழலில் யூசுப் பதான் அதிரடியான சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். ஆனால் அதை பவுண்டரி எல்லையில் ஓடி வந்த டீ வில்லியர்ஸ் சரியாகப் பிடித்து முட்டி போட்டு டைவ் அடித்தார். அப்போது தனது கால் பவுண்டரி எல்லையில் உரசப் போகிறது என்பதை உணர்ந்த அவர் பந்தை உள்ளே தூக்கி போட்டார். அதை மற்றொரு தென்னாப்பிரிக்க வீரர் பிடித்து டீ வில்லியர்ஸின் சூப்பர்மேன் கேட்ச்சை முழுமைப்படுத்தினார்.

இதையும் படிங்க: 102 ரன்ஸ்.. ஹர்மன்ப்ரீத் மிரட்டல், க்ராந்தி அபார சாதனை.. இங்கிலாந்தில் இந்திய மகளிரணி வரலாறு காணாத 2 வெற்றி

அதனால் 44/5 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்திய அணிக்கு இர்பான் பதான் 10, பியூஸ் சாவ்லா 9 என மற்ற வீரர்களும் பெரிய ரன்களை எடுக்கத் தவறினர். இறுதியில் ஸ்டூவர்ட் பின்னி நங்கூரமாக 37* (39) ரன்கள் எடுத்தும் 18.2 ஓவரில் இந்தியா 111/9 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்தது. அதனால் டிஎல்எஸ் விதிமுறைப்படி 88 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றதாக அறிவிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆரோன் பங்சியோ 3, இம்ரான் தாஹிர் 2, வேன் பர்னல் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்கள்.

Advertisement